search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை நிகழ்ச்சி"

    • வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நடனம், மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அனிதாகுமாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நடனம், மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

    விழாவில் ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வதி, செல்வராணி, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் பெரியசாமி, மகேஸ்வரி, கவிதா, இயன்முறை மருத்துவர் மலர்விழி, பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடுவச்சேரி கிராமத்தில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் வீடு வீடாக சென்று இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மாணவ செயலாளர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ், கோவிந்தராஜ், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன், நவீன்பிரபு மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது

    வேலூர்:

    சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-வது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா நேற்று நடந்தது மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் மகாதேவன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் குழும தலைவர் எம்.எஸ்.சரவணன் தலைமை ஆசிரியை கீதா இணைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் உஷா பால்சன் மெட்ரிக் பள்ளி முதல்வர் திங்கள் ஜான்சன் துணை முதல்வர் ஜாய்சி ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை முதல்வர் ஹெப்சிபா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு மற்றும் பலதரப்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட வேண்டும் சர்வதேச அளவில் ஒலிம்பிக் மற்றும் காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் தங்க பதக்கத்தை வென்று வருகின்றனர்.

    வரும் காலங்களில் நீங்களும் இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு முறையான பயிற்சி மேற்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

    முதன்மை இயக்குனராக அர்ஜுனா விருந்து பெற்ற அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் கலந்துகொண்டு பேசினார்.முடிவில் பள்ளி விளையாட்டு குழு தலைவி கோலின் ஜெப்ரி நன்றி கூறினார்.

    சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து அணி கேப்டன் சுனிதா பால்துரை கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நர்மதா அணி தட்டி சென்றது. முடிவில் பள்ளி மாணவர் தலைவர் சிந்து பிரியா நன்றி கூறினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    • பேரூராட்சி தலைவி தொடங்கி வைத்தார்
    • விழிப்புணர்வு நாட்டிய நடன நிகழ்ச்சிகளும் ஓரங்க நாடக நிகழ்ச்சியும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி சார்பில் தமிழ்நாடு பேரூராட்சிகள் ஆணையரகம் மூலம்கொரோனா வைரஸ் தொற்று, டெங்கு காய்ச்சல் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கொட்டாரம் சந்திப்பில் உள்ள காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவி செல்வகனி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவி விமலா பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் தங்ககுமார், பொன்முடி, கிறிஸ்டோபர்சந்திரமோகன், நாகம்மாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பரதாலயா கலைக் குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நாட்டிய நடன நிகழ்ச்சிகளையும் ஓரங்க நாடக நிகழ்ச்சியையும் நடத்திக்காட்டினார்கள்.

    ×