search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் வேண்டுகோள்"

    • துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தருமபுரி நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு என்பதை தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் முழுமையாக செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு, தனது வளர்ச்சிக்கான திட்டத்தில், நகரத் தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

    சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு நகரங்களில், பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டு, இம்முகாம்களில் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு ஊக்கப்படுத்திடவும் ஆணையிட்டுள்ளது.

    எனவே துறை அலுவலர்கள் இது குறித்து விழிப்புணர்வை முழுமையாக ஏற்படுத்துவதோடு, நாடும் நகரமும் தூய்மையானால் நமக்கு தான் பெருமை என்பதை உணர்ந்து, துறை அலுவலர்கள் உள்ளார்ந்த எண்ணத்தோடு சிறப்பாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்திடுவதோடு, குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க அனைவரும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர்சாந்தி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், உதவி இயக்குநர் குருராஜன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் சாமுவேல் ராஜ்குமார், தருமபுரி நகராட்சி செயற்பொறியாளர் ஜெயசீலன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • தன் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி
    • கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் எச்சரிக்கை

    கோவை :

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பெயரில் போலியான வாட்ஸ் அப் ஐ.டி தொடங்கி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர், தனது டுவிட்டர் பக்கத்தில் சில மோசடி நபர்கள் தனது புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்து போலியான வாட்ஸ் அப் எண்ணில் அமேசான் பரிசு கூப்பன் இருக்கிறது.பணம் கொடுத்து இந்த கூப்பன் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த மோசடி தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மோசடி நபர் பயன்படுத்திய செல்போன் எண் விவரங்களையும் கலெக் டர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கலெக்டர் படம், பெயரை பயன்படுத்தி மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த மோசடி நபர் யாரிடம் எவ்வளவு பணம் வசூலித்தார், எவ்வளவு மோசடி நடந்தது என்ற விவரங் கள் தெரியவில்லை. இது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து ள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாட்ஸ் அப் எண் எனக்கூறி கொண்டு மர்ம நபர்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் சிலரின் தொலைபேசி எண்ணிற்கு தவறான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது.

    மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது போலீசார் மூலம் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மேலும், தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறி யப்பட்டால் போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கலெக்டரின் பெயர், புகைப்படத்துடன் தெரியாத எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். ஏதேனும் பொய்யான தகவல்கள் வந்தாலும் உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    ×