search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சமீரன்"

    • கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி.மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    கொரோனா காரண–மாக, கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சுதந்திர தினத்தை–யொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.வருகிற 13-ந் தேதி வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

    சுதந்திர தினத்தன்று மாநகரில் 2 ஆயிரம் போ–லீசாரும், புறநகர் பகுதிகளில் ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

    ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பிளாட்பாரங்களிலும் சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களும் ஸ்கேன் செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களூக்கு 26-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த மின்கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மின்சாரப்பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர் மின்வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. விண்ணப்பப்படிவம் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    வடச ென்னை, கோவை, சேலம், நாம க்கல், கடலூர், கரூர், பெரம் பலூர், திண்டுக்கல், புதுக் கோட்டை, நாகர ்கோவில், அம்பத்தூர், செங்கற்பட்டு, ஓசூர், ஈரோடு, திருச்சி, உளுந்தூ ர்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர், திருவ ண்ணாமலை, குன்னூர், அரியலூர், நீடாமங்கலம், நாகப்ப ட்டினம், ராமநாத புரம், நெல்லை, சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, திண்டிவனம், ராணி ப்பேட்டை, தென்காசி ஆகிய ஏதாவது ஒரு தேர்வுமையத்தை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.

    போதுமான விண்ண ப்பங்கள் பெறப்படாத நிலையில் மேற்கண்ட தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசு தொழி ற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தேர்வுகள் நடை பெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத் தலைவரின் முடிவே இறுதுயானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களூக்கு 26-ந் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பப்பட வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 0422 2642041, 9578695796, 8838583094, எண்களை தொடர்பு கொள்ளலாம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×