search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா-கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றுகிறார்
    X

    கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா-கலெக்டர் சமீரன் தேசிய கொடியேற்றுகிறார்

    • கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
    • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

    கோவை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி.மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.

    கொரோனா காரண–மாக, கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சுதந்திர தினத்தை–யொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.வருகிற 13-ந் தேதி வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

    சுதந்திர தினத்தன்று மாநகரில் 2 ஆயிரம் போ–லீசாரும், புறநகர் பகுதிகளில் ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்.

    ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பிளாட்பாரங்களிலும் சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களும் ஸ்கேன் செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

    Next Story
    ×