search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறிக்கோழி விலை"

    • உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.

    கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.

    கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.

    அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது.
    • கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.

    பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு, கோழிகளின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. சமீப நாட்களாக கறிக்கோழி விற்பனை சரிந்துள்ளது. இதனால் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விட்டதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் கறிக்கோழியை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தீபாவளிக்கு முன்பு வரை பண்ணைகளில் கறிக்கோழிகளின் கொள்முதல் விலை கிலோ ரூ.100 ஆக இருந்தது. தற்போது ரூ.20 குறைந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் கிலோ ரூ.250 வரை விற்பனையானது. தற்போது நுகர்வு குறைந்துள்ளதால் விலை குறைந்து கிலோ ரூ.200-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:-

    சில நாட்களாக கறிக்கோழி நுகர்வு குறைந்து வருகிறது. ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி வருவதால் கார்த்திகை மாதம் விற்பனை குறைவது வழக்கம் தான். இந்த முறை முன் கூட்டியே விற்பனை சரிவடைந்துள்ளது.

    இதனால் பண்ணைகளில் வழங்கப்பட்டு வரும் கோழிகளின் எடை அதிகரித்து வருகிறது. கூடுதல் நாட்கள் பண்ணைகளில் வைத்து கோழிகளை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விற்பனையை அதிகப்படுத்த வேண்டி கொள்முதல் விலையை குறைத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.
    • கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதே போல முட்டைக்கோழி கிலோ ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.

    எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.78 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தமுடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது.

    • கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த கறிக்கோழிகள் பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 102 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதே போல நாமக்கலில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 72 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 70 ரூபாயாக குறைக்கப்பட்டது. முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 410 காசுகளாக நீடிக்கிறது.

    • முட்டை விலை கடந்த 10 நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது.
    • கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 92 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம் ஈரோடு, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 92 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதே போல நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல் 62 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முட்டை விலை கடந்த 10 நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது. இதனால் முட்டை விலை 40 காசுக்கு மேல் குறைத்து விற்க கூடாது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • முட்டை கோழி விலையில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
    • 55 ரூபாயாக முட்டை கோழி விலை 65 ரூபாயாக உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், ஈரோடு, பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த கறிக்கோழி பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கறிக்கோழி விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில், கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை ரூ. 89 ஆக உயர்ந்தது. இதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டைக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவைகள் குறித்து விரிவாக முட்டை கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் முட்டை கோழி விலையில் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 55 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 65 ரூபாயாக உயர்ந்தது.

    ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 455 காசுகளாக நீடிக்கிறது.

    • நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம், சேலம் உட்பட பல பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு, நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் பல்லடத்தில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் சேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையில் கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறிக்கோழி விலை, ரூ.77 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதேபோல நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையில் ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.67 ஆக இருந்த முட்டை கோழி விலை ரூ.72 ஆக உயர்த்தப்பட்டது.

    ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த சில நாட்களாக 440 காசுகளாகவே நீடிக்கிறது.

    • முட்டை கோழி விலை கிலோ ரூ. 92-ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 565 காசுகள் ஆகும்.
    • கறிக்கோழி கிலோ ரூ.102-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி கிலோ 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ. 5 உயர்த்த முடிவு செய்தனர்.

    இதனால் முட்டை கோழி விலை கிலோ ரூ. 92-ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 565 காசுகள் ஆகும். கறிக்கோழி கிலோ ரூ.102-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 565 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கறிக்கோழி விலை பல்லடத்தில் தேசிய ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று கறிக்கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.6 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.108 ஆக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, ரூ.102 ரூபாயாக குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.87 ஆக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதே போல நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 565 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    • முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாகவும், கறிக்கோழி விலை 109 ஆகவும் நீடிக்கிறது.
    • விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ரூ.3 குறைக்க முடிவு செய்தனர். அதனால் முட்டை கோழி விலை ரூ.3 குறைத்து கிலோவுக்கு ரூ.82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாகவும், கறிக்கோழி விலை 109 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என கோழி பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
    • சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இந்த கறிக்கோழி பண்ணைகள் மூலம் பல லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.5 குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதன்படி ரூ.114 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி ரூ.109 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கலில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை குறித்தும் உற்பத்தி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ.85 ஆகவே நீடிப்பது என்று அறிவிக்கப்பட்டது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் மாற்றம் செய்யப்படாததாலும் முட்டை விற்பனை சீராக இருப்பதாலும் விலையில் மாற்றம் செய்யாமல் 555 காசாக நீடிக்கலாம் என வலியுறுத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பண்ணையாளர்கள் முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கொள்முதல் விலை என்பது பண்டிகை நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை.

    சேலம்:

    தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உட்பட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொள்முதல் விலை என்பது பண்டிகை நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கை.

    கடந்த 1-ந் தேதி கறிக்கோழி கொள்முதல் விலை 120 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இது படிப்படியாக குறைந்து இரண்டு வாரத்தில் 30 ரூபாய் சரிந்தது.

    இதை அடுத்து 18-ந்தேதி 92 ரூபாயாக உயர்ந்தது. படிப்படியாக சரிந்து வந்த நிலையில் நேற்று மேலும் 4 ரூபாய் குறைந்து 66 ரூபாய் என கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதனால் 3 வாரங்களில் 54 ரூபாய் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலிசுப்ரமணியம் கூறியதாவது:-

    வட மாநிலங்களில் ஸராவண் விரதம் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக வட மாநிலங்களுக்கு லோடு செல்வது தடைபட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஆடி 18 வரை நுகர்வு இருக்காது. கேரள மாநிலத்திற்கும் லோடு செல்லவில்லை. 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழியை மூன்று நாள்கள் கழித்து வியாபாரிகள் பிடிக்கின்றனர்.

    அதனால் பண்ணைகளில் கறிக்கோழி தேக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு கறிக்கோழி கொள்முதல் விலையை குறைக்கும் விலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆவணி மாதம் பிறந்தால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×