search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா சட்டமன்ற கூட்டம்"

    • காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் துவங்குகிறது.
    • சட்டமன்ற கூட்டத்திற்கு ஆர்வி தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார் என்று அறிவிப்பு.

    கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார். பதிவியேற்ற பிறகு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக சட்டமன்ற கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா அறிவித்து இருந்தார்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று துவங்குகிறது. இன்று தொடங்கி மே 24 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்திற்கு ஆர்வி தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

     

    இதைத் தொடர்ந்து சபாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே தலைமையில் இன்று (மே 22) சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 224 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சட்டமன்ற கூட்டத்தின் மூன்றாவது நாள், மே 24 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற இருக்கிறது. 

    ×