search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா இடைத்தேர்தல்"

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.சி.க்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் அந்த இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடக மாநில முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பா ஷிமோகா எம்.பி.யாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் ஷிகாரிபூரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் ஷிமோகா எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். எடியூரப்பாவை தவிர மொலகல்முறு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பல்லாரி எம்.பி ஸ்ரீராமுலு மற்றும் மெலுகோட் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற மாண்யா எம்.பி சி.எஸ். புட்டராஜூ ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளனர்.

    மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 11 கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர்களில் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்ற கர்நாடக மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, கொரட்கேர் தொகுதியில் வெற்றி பெற்ற மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, பிஜபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பசாசங்கவுடா பாட்டில் யட்னால், ஹெப்பல் தொகுதியில் வெற்றி பெற்ற பைராடி சுரேஷ் மற்றும் கோவிந்த் ராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.சோமன்னா ஆகிய 5 பேரும் தங்களின் கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 3 எம்.பி.களும், 5 எம்.எல்.சி.களும் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll #BSYeddyurappa
    ×