search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர்"

    • மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் 12-ந் தேதி நடக்கிறது
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 12-ந் தேதி (செவ்வாய்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    கிழக்கு மண்டலத்திற்கு (எண் 1) உட்பட்ட ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூர்து நகர், ஆத்திக்குளம், கோ.புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • வணிக வரித்துறை உதவி கமிஷனர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டுபட்டுள்ளது.
    • வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர், லேக் வியூ கார்டன் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 64). வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றார். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மகாலிங்கம் கடந்த 3-ந் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பொருட்கள் திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×