search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி மழை"

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது.
    • அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக வெயிலடித்து வந்த நிலையில் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு 60.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    பேச்சிபாறை அணை பகுதியில் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் அணை பகுதிகளிலும் மழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக உள்ளது. அணைக்கு 616 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 439 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.29 அடியாக உள்ளது. அணைக்கு 478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 11.45 அடியாக உள்ளது. அணைக்கு 101 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    3 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. சிற்றாறு -2 அணையின் நீர்மட்டம் 11.84 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.5 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.90 அடியாக உள்ளது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். அந்த பகுதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவுக்கு நீர் வரத்து உள்ளது.
    • 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 5 தினங்கள் வரை இந்த மழை நீடிக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் மழையின் தாக்கமாக, தமிழகத்தின் குமரி மாவட்டத்திலும் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள எல்லை அருகே அமைந்துள்ள தமிழக பகுதிகளில் பரவலாக மழை நீடித்தே வருகிறது.

    இன்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 14.2 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. இதேபோல் சுருளோடு பகுதியில் 5.4 மில்லிமீட்டர் மழையும், திற்பரப்பு அருவியில் 4.6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவுக்கு நீர் வரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து பாசனத்திற்கு 281 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.35 அடி யாக உள்ளது. அணைக்கு 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 375 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.60 அடியாக உள்ளது. அணைக்கு 113 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.69 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.14 அடியாகவும் உள்ளது. இந்த அணையில் இருந்து 1 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- (மில்லி மீட்டரில்)

    பாலமோா்-14.2, சுருளோடு-5.4., திற்பரப்பு - 4.6. புத்தன் அணை-3. பேச்சிப்பாறை-2 பெருஞ்சாணி-2.4, சிற்றார்-1-4.6, பூதப்பாண்டி-1.4.

    ×