search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிம வளங்கள்"

    • 4 வழிச்சாலை பணிகள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே காரணம்
    • முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் ஆதாயத்திற்காக மதரீதியான பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அமைதி நாடி அனைத்து மக்களும் இருக்கும்போது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என் கின்ற முனைப்போடு சிலர் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சனை இல்லாத ஊரில் புதிய பிரச்சினைகள் எல்லாம் எழுப்பி இப்போது பூதாகரமாக கொண்டு வரக்கூடிய நிலை உள்ளது. இது மிகவும் துரதிஷ்ட வசமானது.மாவட்ட ஆட்சியாளரும், காவல்துறை கண்காணிப்பா ளரும் ஒரு அழுத்தங்கள் காரண மாக நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது எனக்கு சவால் விட்டு உள்ளார். எங்கு வேண்டு மானாலும் வாருங்கள். விவாதத்திற்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். நான் அதற்கு தயாராக உள்ளேன். மனோ தங்கராஜ் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவரது செயல் பாடுகள் அந்த நம்பிக்கையை தரவில்லை.

    மாவட்டத்திலிருந்து குவாரிகள் மூலமாக வெளிமா நிலங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படு கிறது. இதில் ஆணை பிறப்பிக்க வேண்டியது அமைச்சர்தான். அவர், கோரிக்கை வைக்கக் கூடாது. ஆனால் மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு கொடுக்கிறார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 51 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் ஏறக்கு றைய 52 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் நிதி இந்த ரூபாயில் 15 சதவீதம் தனியாக தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத ஆணை எல்லா பஞ்சாயத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைவிட தலைகுனிவு வேறு ஏதும் உண்டா?.

    குமரி மாவட்டத்தில் இருந்த சூழ்நிலைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சர் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் 11-ந்தேதியிலிருந்து 15-ந் தேதிக்குள் நேரம் கொடுக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டு இருக் கின்றது. மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் சேர்ந்து சந்திக்க உள்ளோம்.

    நாம் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நான்கு வழி சாலையில் நாங்கள் என்ன செய்ய தவறினோம் என்பதை கூறுங்கள். எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளீர்கள். நீங்கள் ராஜினாமா கடிதம் எழுதி தாருங்கள். அடுத்த மூன்று மாத காலத்தில் இந்த மாவட்டத்தில் அனைத்து பணிகளும் தொடங்கப்படுகிறதா என்பதை நீங்கள் பாருங்கள்.

    தேங்காய் பட்டின துறைமுகத்திற்கு மத்திய அரசு நிதி கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.இதுவரை 27 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தேங்காய் பட்டினம் துறைமுகத்தை மீண்டும் கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இனி அங்கு ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது.

    கிழக்கு கடற்கரை சாலை எனது முக்கிய திட்டங்களில் ஒன்று. இங்கிருந்து மகாபலிபுரம் வரை அந்த திட்டம் உள்ளது.தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை ரூ.2600 கோடி திட்டத்தை தற்போது மாநில அரசு கேட்டு வாங்குகிறது. துறைமுகத்தில் தவறு நடந்துள்ளது. அதனை சரி செய்ய கால அவகாசம் கிடைத்துள்ளது. என்ன செய்துள்ளார்கள்? இங்கு மண் இல்லை, ஜல்லி இல்லை. கேரளாவிற்கு கனிமவளங்கள் செல்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தி.மு.க. ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் கேரளா செல்லவில்லை என்று கூறுங்கள். நாங்கள் பாராட்டுகிறோம்.

    4 வழி சாலை பணிகள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே காரணம். ஜல்லி, மண், தண்ணீர் கொடுக்கா விட்டால் எப்படி பணிகள் நடைபெறும். உங்களால் முடியவில்லை என்றால் கூறுங்கள். மத்திய மந்திரி நிதின் கட்கரி கடந்த 26-ந்தேதி எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 4 வழிசாலை பணிகளை விரைவாக தொடங்கி முடிப்பதாக கூறியுள்ளார்.இது தொடர்பாக மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வி.கே.சிங் ஆகியோரை சந்தித்து பேசினேன். மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் கவலைப்பட வில்லை. தி.மு.க. தலைவ ராக மீண்டும் பொறுப்பேற் றுள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
    • தரமான இலவச மருத்துவம், தரமான இலவச கல்வி தர வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரையில் இருந்து மணல் அள்ளுவதற்காக 1144 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அர சின் அருமணல் ஆலைக்கு அளிக்க இருக் கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள் சந்தை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தலைமை ஒருங்கிைண ப்பாளர் சீமான் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியி னர் திரளாக கலந்து கொண்டனர்.

    தேங்காப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடித் துறைமுக நுழைவு வாயிலை சீர மைத்து மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க வேண் டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    குமரி மாவட்டம், மார்ஷல் நேசமணி, ஜீவா னந்தம், அய்யா வைகுண்டர் போன்ற போராளிகளை கண்ட பூமி. நாங்கள் வணங்குகிற சாமியை விட பூமியை மேலாக கருதுவதால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்து கிறோம்.

    குமரி மண்ணின் மலை வளத்தையும் கடல், மண் வளத்தையும் காப்பாற்ற வேண்டும். தமிழக கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    தேங்காப்பட்டணம் துறைமுகம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு முழுமை யாக கட்டமைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டது. இதனால் உயிர் பாதுகாப்பு க்காக கேட்ட துறைமுகம் உயிரை எடுத்துக் கொண்டது. இதுவரை 27 மீனவர்கள் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துறைமுகம் சீரமைக்கப்பட வேண்டும்.

    இலவசம் கொடுக்கக் கூடாது என்று இப்பொது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பேசி வருகிறேன். இலவசத்தை தவிர்த்து விட்டு தரமான இலவச மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இலவச பஸ் பாசை நிறுத்திவிட்டு இலவச தரமான கல்வியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், மாணவர் பாசறை ஆலிஸ்பாத்திமா, மகளிர் பாசறை காளியம்பாள், மாநில மகளிர் பாசறை சீத்தா, ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன், கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், இளைஞர் பாசறை ஹிம்லர் உள்ளிட்டோரும் பேசினர்.

    ×