search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்
    X

    தமிழக கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்

    • நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
    • தரமான இலவச மருத்துவம், தரமான இலவச கல்வி தர வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கடற்கரையில் இருந்து மணல் அள்ளுவதற்காக 1144 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அர சின் அருமணல் ஆலைக்கு அளிக்க இருக் கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள் சந்தை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தலைமை ஒருங்கிைண ப்பாளர் சீமான் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியி னர் திரளாக கலந்து கொண்டனர்.

    தேங்காப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடித் துறைமுக நுழைவு வாயிலை சீர மைத்து மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க வேண் டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    குமரி மாவட்டம், மார்ஷல் நேசமணி, ஜீவா னந்தம், அய்யா வைகுண்டர் போன்ற போராளிகளை கண்ட பூமி. நாங்கள் வணங்குகிற சாமியை விட பூமியை மேலாக கருதுவதால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்து கிறோம்.

    குமரி மண்ணின் மலை வளத்தையும் கடல், மண் வளத்தையும் காப்பாற்ற வேண்டும். தமிழக கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    தேங்காப்பட்டணம் துறைமுகம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு முழுமை யாக கட்டமைக்கப்படாமல் திறந்து வைக்கப்பட்டது. இதனால் உயிர் பாதுகாப்பு க்காக கேட்ட துறைமுகம் உயிரை எடுத்துக் கொண்டது. இதுவரை 27 மீனவர்கள் இறந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துறைமுகம் சீரமைக்கப்பட வேண்டும்.

    இலவசம் கொடுக்கக் கூடாது என்று இப்பொது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பேசி வருகிறேன். இலவசத்தை தவிர்த்து விட்டு தரமான இலவச மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இலவச பஸ் பாசை நிறுத்திவிட்டு இலவச தரமான கல்வியை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், மாணவர் பாசறை ஆலிஸ்பாத்திமா, மகளிர் பாசறை காளியம்பாள், மாநில மகளிர் பாசறை சீத்தா, ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன், கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், இளைஞர் பாசறை ஹிம்லர் உள்ளிட்டோரும் பேசினர்.

    Next Story
    ×