search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிம வள கொள்ளை"

    • கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை.
    • கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கனிமவள பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கனிம வளங்களை கடத்தி எம். சாண்ட் ஜல்லிக்கற்க்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என்ற பெயரில் கேரளா, கர்நாடகா, மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, என கனிம வளம் கடத்தப்படும் பகுதிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. 20 டன்னுக்கு மேல் கிராமசாலைகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் மிகப்பெரிய கனரக வாகனங்களை பயன்படுத்தி,சுமார் 60 டன்னுக்கும் அதிகமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், சாலைகள் சேதமடை கின்றன. மேலும் கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை. சட்டவிரோதமாக வெடி மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் பல்லடம் சுக்கம்பாளையத்தில் கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றது என்றார். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வரும் மே 16ந்தேதி செவ்வாய்க்கிழமை பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திரு ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
    • அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு தாராபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்தாமல் வேறு நகரத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.உடனடியாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தாராபுரத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×