search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனரக வாகனங்களால்"

    • கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் பர்கூர் மலை பாதை வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்
    • பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து இந்த வழித்தடத்தை கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

    கர்நாடக மாநிலத்திற்கு உரம்மூட்டையை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதை யில் லாரியின் பிரேக் பிடிக்காமல் சாலையின் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி கட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உரமூட்டைகள் அனைத்தும் சாலையில் நடுவே சிதறி கிடந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். இதனால் பர்கூர் அந்தியூர் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணிக்கு போக்கு வரத்து சீர் செய்யப்பட்டது. சாலையில் சிதறி கிடந்த உரமூட்டைகள் மாற்று லாரியில்ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    போக்குவரத்து சரி செய்யும் வரை பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தங்கவேல் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேர த்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது.மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள்.லாரிக்கு எத்தனை டன் ஏற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் பொருட்களை ஏற்றி மலை ப்பாதையில் வருகிறதா என்று பர்கூர் சோதனை சாவடியிலும் வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியிலும் சோதனை செய்த பின்னரே அனுமதி த்தால் இந்த விபத்துக்கள் தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    லாரியில் முறையான எப் சி செய்திருக்கிறார்களா என்று அனைத்தையும் சோதனை செய்த பின் அனுப்பினால் விபத்துக்கள் குறையும்.

    ×