search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barkur Hill Pass"

    • கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் பர்கூர் மலை பாதை வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்
    • பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து இந்த வழித்தடத்தை கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

    கர்நாடக மாநிலத்திற்கு உரம்மூட்டையை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதை யில் லாரியின் பிரேக் பிடிக்காமல் சாலையின் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி கட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உரமூட்டைகள் அனைத்தும் சாலையில் நடுவே சிதறி கிடந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். இதனால் பர்கூர் அந்தியூர் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணிக்கு போக்கு வரத்து சீர் செய்யப்பட்டது. சாலையில் சிதறி கிடந்த உரமூட்டைகள் மாற்று லாரியில்ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    போக்குவரத்து சரி செய்யும் வரை பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தங்கவேல் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேர த்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது.மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள்.லாரிக்கு எத்தனை டன் ஏற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் பொருட்களை ஏற்றி மலை ப்பாதையில் வருகிறதா என்று பர்கூர் சோதனை சாவடியிலும் வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியிலும் சோதனை செய்த பின்னரே அனுமதி த்தால் இந்த விபத்துக்கள் தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    லாரியில் முறையான எப் சி செய்திருக்கிறார்களா என்று அனைத்தையும் சோதனை செய்த பின் அனுப்பினால் விபத்துக்கள் குறையும்.

    • எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
    • இந்த பகுதி எப்போதும் பச்சை பசேலென காட்சி அளிக்கும்

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இதில் தாமரைக்கரை மிகவும் உயரமான பகுதியாக இருந்து வருகிறது.

    அந்தியூர், பர்கூர் வழி யாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லும் பிர தான சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக செல்வதால் மைசூருக்கு விரைவில் செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகிறது. மேலும் லாரி, டெம்போ என சரக்கு வாகன ஓட்டிகள் அதிகள வில் இந்த வழியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனால் எந்த நேரமும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் பர்கூர் மலை ப்பகுதியில் தாமரைக்கரை, தட்டக்கரை உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதி எப்போதும் பச்சை பசே லென காட்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

    மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் விவசாய பொருட்களை விவசாயிகள் அந்தியூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதிகளில் வெயில் காலங்க ளிலும் குளிர்ந்த காற்றுவீசு கிறது. இதனால் தற்போது இந்த பகுதிக்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறா ர்கள். இதனால் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன.

    ஊட்டி, ஏற்காடு, கொடை க்கானல் உள்ளிட்ட பகுதி களுக்கு செல்ல முடியா தவர்கள் ஈரோடு மாவட்ட த்தில் பல்வேறு பகுதி களிலிருந்தும் பர்கூர் மலைப்பகுதிக்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். மேலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கு வந்து தங்கி இயற்கை அழகு கொஞ்சும் மலைப் பகுதியை ரசிக்க ஏராளமா னோர் வந்து செல்கின்றார்கள்.

    இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து மலைகளில் உள்ள மரங்கள் வாடி இலைகள் உதிர்ந்து காணப்பட்டது. தற்போது அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    இதையடுத்து பர்கூர், தாமரைக்கரை, தட்டக்கரை மலைப்பகுதிகள் மேலும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மலைப்பாதையின் முன் பகுதியில் சுற்றுலா பயணி கள் செல்பி எடுத்து செல்கி றார்கள்.

    மேலும் இந்த மலைப்பகுதி வழியாக கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மலை யின் அழகை கண்டு வாகனங்களை ஓரமாக நிறுத்தி இந்த ரசித்த ப்படியே செல்கிறார்கள். இதனால் இந்த மலையின் அழகை ரசிப்பதற்காகவே தினமும் பலர் இந்த வழியாக வருகிறார்கள்.

    மலைப்பாதை வழியாக செல்லும்போது சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி வரட்டு பள்ளம் அணையின் முழு தோற்றத்தையும், அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளையும் காண முடிவதால் பர்கூர் வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் அணையின் தோற்றத்தையும் ரசித்து செல்கின்றார்கள்.

    • கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப் பாதையில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல க்கூடிய தெசிய நெடுஞ் சாலை உள்ளது.

    இந்த மலைப்பாதை வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம், திம்பம் வனப்பகுதி மலைப்பாதை 23 கொண்டை ஊசி வளைவு கள் கொண்டது. இந்த வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

    திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகன ங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.

    மேலும் நேரம் விரையம் ஏற்படு வதும் தவிர்க்கபபடுவதால் பர்கூர் மலை பாதையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இதையடுத்து பர்கூர் மலை்பாதை சாலைகள் அந்தியூரில் இருந்து தமிழக எல்லைப் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்தியூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் மைசூர் செல்லும் பர்கூர் மலை ப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதை யடுத்து ஒரு சில இடங்களில் சரி செய்யப்பட்டது. பெருபாலான இடங்களில் ரோட்டோரங்களில் பாறை கள் அப்படியே கிடக்கிறது.

    இதே போல் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து செட்டிநொடு, தாமரைக்கரை, பர்கூர் தட்டகரை, கர்கேகண்டி வரை சாலைகளில் சுமார் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டும், சாலையில் மரங்கள் முறிந்தும் கிடக்கிறது.

    இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாக னங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில 4 சக்கர வாகனங்கள் மட்டுமே தட்டுதடுமாறி சென்று வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    எனவே பர்கூர் மலை ப்பாதையில் ரோட்டோரம் கிடக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை வனத்துறை யினர் மற்றும் ேதசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×