search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகளுக்கு சீல்"

    • 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது.
    • வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கூடலூர் நகரில் தாசில்தார் சித்தராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று திடீரென வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அதை பறிமுதல் செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளுக்கு அபராத தொகை வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தடை செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைமீதும், அதன் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    • திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33).
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33). மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அமானுல்லா (53). இவர்கள் தங்களது மளிகைக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

    அதன்படி ஆவினங்குடி போலீசாரில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து போலீசாரின் பரிந்துரையின் பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 மளிகைக்கடை களுக்கும் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

    • மரக்காணம் அருகே போதை பொருள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது போல் போதை ப்பொருட்கள்விற்பனை செய்பவர்களை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை பஸ் நிறுத்தம் மற்றும் செட்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு சிலகடைகளில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்க ள்விற்பனை செய்ய ப்படுவதாக மரக்காணம் போலீசார்க்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இதனால் அனுமந்தை கிராமம் மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த வள்ளி, செட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தக வுஸ்பாஷா பெட்டி கடைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களது கடைகளில் பான், குட்கா ஆகியதடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்துள்ளது. இதனால் போதைபொருட்களை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கும் போலீசார்சீல்வைத்தனர்.

    • நகராட்சி கடைகள் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன
    • வாடகை கட்ட தவறினால் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட், ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 608 கடைகள் உள்ளது. இந்த கடைகளை ஏலம் முறையில் ஏலம் எடுத்தவர்கள் மாத வாடகை செலுத்த வேண்டும்.

    நகராட்சி கடைகளில் பல்வேறு கடைகள் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இவர்களுக்கு பலமுறை நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் சென்று வாடகை கேட்டும் வாடகை தரவில்லை.

    இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு பழைய பஸ் நிலையம் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் உள்ள 15 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:-

    நகராட்சி கடைகள் வாடகை மூலம் நகராட்சிக்கு கிடைக்கும் வருவாய் கொண்டு திருப்பத்தூர் நகராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து வருகிறோம்.

    நகராட்சிக்கு வளர்ச்சிப்பணிகள் செய்ய உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கியத்தொகையை கட்ட வேண்டும் கட்ட தவறினால் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ஏலம் விடப்படும் என தெரிவித்தார்.

    ×