search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைகளுக்கு சீல்"

    • தருமபுரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
    • உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

    தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனைகள், அபராதம் மற்றும் கடைக்கு சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பைநல்லூர், இருமத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் , மொரப்பூர் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரன் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கம்பைநல்லூர், இருமத்தூர் சாலை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பீடா கடை, வகுரப்பம்பட்டியில் 2 மளிகை கடைகள் மற்றும் இருமத்தூரில் பள்ளி அருகில் ஒரு பெட்டி கடை மேலும் மருதுபட்டி சாலை - சுண்டைக்காய்பட்டியில் ஒரு மளிகை கடை என 5 கடைகளில் சோதனை நடத்தினர்.

    அங்கு விற்பனைக்கு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் அடிப்படையில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கியதுடன் முதல் தகவல் அறிக்கை பதிந்த 3 கடையை தவிர்த்து முதல் முறையாக பிடிபட்ட சுண்டக்காய்பட்டி மளிகை கடைக்காரருக்கும் கம்பைநல்லூர் ஜங்ஷன் பகுதியில் மீண்டும் மீண்டும் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த பீடா கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை மூடி சீல் வைத்தனர். 

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • அணைக்கட்டு தாலுகாவில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார்.

    துணை தாசில்தார்கள் குமார், திருக்குமரேசன், பிடிஒக்கள் சுதாகரன் , சத்தியமூர்த்தி, சார்பதிவாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

    அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படும் தனியார் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் நிலவேம்பு மரம் வைக்கப்பட வேண்டும்.

    கார்த்திகை பட்டத்தில் விவசாயம் செய்ய கால சூழ்நிலைகளுக்கு ஏதுவான நெல்மணி விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மாட்டு கொட்டகை ஆட்டு கொட்டகை கட்சி பாகுபாடின்றி தகுதி உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை பட்டியலிட்டு அடுத்த மாதம் நடைபெறும் குறைதீர்வு கூட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் நலன் கருதி மாதத்திற்க்கு 10 நாட்கள் 100 நாட்கள் வேலையாட்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும், கொய்யா விவசாயி களுக்கு மானியத்தில் உரங்களை வழங்க வேண்டும், காய்கறிகளை ஏற்றுமதி செய்ய பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

    இதில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 15 நாட்களாக அழைக்களிக்கப்படுவதாக ஒரு விவசாயி கூறுகையில் உடனடியாக அதனை தாசில்தார் வேண்டா, பி டி ஓ சுதாகரன் வழங்கினர்.

    இறுதியாக தாசில்தார் வேண்டா பேசுகையில்:-

    கூட்டத்தில் வைக்க ப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும் என்றனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமையில் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சொத்து வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.
    • குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாத கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும்,

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் வரி பாக்கி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

    இதனை வசூல் செய்யும் விதமாக ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அமைத்து வரி செலுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுறுத்தியும் சில வணிக நிறுவனங்கள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ளனர்.

    இதனை பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமையில் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சொத்து வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாத கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும், குடிதண்ணீர் இணைப்பை துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
    • விளம்பர பலகை மற்றும் ஒலிப்பான் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாதலமாக உள்ள காரணத்தினால் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகப்படியாக உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விளம்பர பலகையை வைத்து தொடர்ந்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து சாலையோரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

    கியாஷ்க் சரியான முறையில் செயல்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணிப்பதோடு அருகில் உள்ள கடைகளில் குப்பைகளை கியாஷ்கில் கொடுக்குமாறு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோதனைச்

    சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பான் கருவி மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர்களை ஈடுபடுத்தி தூய்மை பணிகளை இயக்கமாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் நிலுவையை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று சூரமங்கலம் உதவி வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார் மற்றும் அலுவலர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களாக வாடகை பாக்கி வைத்துள்ள 15 கடைகளை பூட்டி அதிரடியாக சீல் வைத்தனர்.

    மேலும் சில கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாடகை பாக்கி வைத்துள்ள கடைகள் கண்டறியப்பட்டு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதன் பின்னரும் வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்றனர்.

    • வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
    • பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த அறிவுறுரை

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிகவரி கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    செங்கம் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் கடை வைத்திருப்போர் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் எனவும் வாடகை பாக்கி உள்ளவர்கள் முன்கூட்டியே வாடகை செலுத்திட அறிவுறுத்தப்பட்டது.

    அதேபோல செங்கம் பகுதியில் வீட்டு வரி, குடிநீர் வழி உட்பட வரி இனங்கள் செலுத்தாதவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பேரூராட்சிக்கு வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் நேற்று துண்டிக்கப்பட்டது.

    பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    • சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.
    • வீடு மற்றும் கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி எல்லைக்குட்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, கடை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.

    அதிக வரி பாக்கி உள்ள வீடு மற்றும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதுடன் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் அதிக வரி பாக்கி வைத்துள்ள ஆறுமுகாச்சாரி தெரு மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    பொதுமக்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துமாறும், வரி செலுத்தாத வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    • வரி செலுத்துவதற்காக மாநகராட்சி சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அதன் பின்னரும் வரி செலுத்தாவிட்டால் சீல் வைக்கப்படுகிறது.

    மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடை நடத்துவோர் வரி செலுத்தாவிட்டாலும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முன்னாள் எம்.பி.க்கு சொந்தமான வணிக வளாகம்

    வரி செலுத்துவதற்காக மாநகராட்சி சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் சேரன் டவர்ஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த வணிக வளாகம் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமானது.

    இந்த வணிகவளாகத்தில் காபி ஷாப், ஓட்டல் உள்பட 20க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இந்த வணிக வளாகத்திற்கு மண்டல உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.

    அப்போது அவர்கள் வணிக வளாக நிறுவனத்தில் செயல்பட்டு வரும் 5 கடைகள் இதுவரை வரி கட்டாமல் இருந்துள்ளனர். மொத்தம் அவர்கள் ரூ.1 கோடியே 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்திருப்பது தெரியவந்தது.

    வரி நிலுவை தொகை செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    இதேபோல் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மாநகராட்சி 70-வது வார்டு பூ மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் சுற்றுச்சுவரை அனுமதியின்றி இடிக்கப்பட்டு இருந்தது.

    இதை பார்த்த அவர், போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போரின் கடைகளை சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.

    அனுமதியின்றி சுற்றுச்சுவரை இடித்ததற்காக ஒரு கடையும், வாடகை செலுத்தாததால் 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.

    • தாமரை குளக்கரை பகுதியை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமான 3 வணிக வளாகங்கள் உள்ளன.
    • பேரூராட்சி நிர்வாகம் கடையின் குத்தகைதாரர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் தாமரை குளக்கரை பகுதியை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமான 3 வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 33 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தாமரை குளம் வணிக வளாகத்தில் 3 கடைகள், பஜாரில் உள்ள பழைய வணிக வளாகத்தில் 7 கடைகள், பேரூராட்சி எதிரே உள்ள புதிய வணிக வளாகத்தில் 9 கடைகளை எடுத்தவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரிவர வாடகை செலுத்தவில்லை. மொத்தம் 19 கடைகள் ரூ.8.50 லட்சம் வரை வாடகை தொகை நிலுவை வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் கடையின் குத்தகைதாரர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவர்கள் வாடகை பணத்தை கட்டவில்லை. இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு பேரூராட்சி ஊழியர்கள் இன்று காலை அதிரடியாக சென்று சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளித்தது
    • வியாபாரிகள் அதிர்ச்சி

    வேலூர்:

    வேலூர், மாநகராட் சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் குத்தகை இனங்க ளில் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூல் செய்யும் பணியில் மாநக ராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் கோட்டை எதிரே உள்ள லாரி ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்த மான கடைகள் உள்ளது. இதில் சிலர் வாடகைக்கு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பகுதியில் உள்ள 3 கடைகள் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதால், வாடகையை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் நோட் டீஸ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சி அதிகாரிகள் கடைகளின் அலுவலக வேலை நேரத் தில் தான் சீல் வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். ஆனால் நேற்று நள் ளிரவு லாரி ஸ்டாண்டுக்கு வந்த அதிகாரிகள் பூட்டி யிருந்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் வாடகை பாக்கி உள்ளதால் கடைக ளுக்கு சீல் வைத்து உள்ள தாக நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கடைகளின் உரிமை யாளர்கள் நள்ளிரவில் கடைகள் பூட்டி சீல் வைத்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது மாநகராட்சி யின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எங்க ளின் அன்றாட தேவைக் கான பொருட்களை கடை யின் உள்ளே வைத்து உள்ளோம்.

    இதனால் எங்களின் தொழிலும் பாதிக் கப்படுகிறது. நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

    • நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    • 100 சதவீத வருவாய் இலக்கினை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது-

    குடியாத்தம் நகராட்சியில் தீவிர வரி வசூல் நடைபெற்று வருகிறது. குடியாத்தம் நகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 10 கோடியே 17 லட்சத்தி 99 ஆயிரம் நிலுவையாக உள்ளது.

    சொத்து வரி 3கோடியே 22 லட்சத்து 93 ஆயிரம், குடிநீர் கட்டணம் 2 கோடியே 88 லட்சத்து 25 ஆயிரம், குத்தகை இனங்களின் பாக்கி 2 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரம், தொழில் வரி 70 லட்சத்து 59 ஆயிரமும், இதர வரி இனங்களாக 90 லட்சமும் நிலுவையில் உள்ளது.

    இதனால் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் நிலுவைத் தொகை வைத்துள்ள நபர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் அல்லது வலைதளம் வாயிலாகவோ செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

    தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை கள் எடுக்கப்படும் எனவும் கடை வாடகை நிலுவை வைத்துள்ள நிலுவை தாரர்கள் உடனடியாக 7 தினங்களுக்குள் நிலுவைத் தொகையை அபரா தத்துடன் செலுத்தா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் மேலும் அதிக வரி பாக்கி நிலுவை வைத்துள்ள நபர்களின் பெயர் பட்டியல் நகரின் முக்கிய பகுதியில் விளம்பரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

    எனவே வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் நலன் கருதி விடுமுறை தினங்களில் நகராட்சி அலுவலக வரி வசூல் மையம் செயல்படுகிறது எனவும் குடியாத்தம் நகராட்சி 100 சதவீதம் வருவாய் இலக்கினை அடைய பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.
    • இதையடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானு சுஜாதா, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் பெனாசிர் பாத்திமா உத்தரவின் பேரில் அரூர் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி அரூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

    அப்போது அரூர் பழையபேட்டை வர்ண தீர்த்தம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    கடை உரிமையாளர்கள் மூன்று பேருக்கு தலா ரூபாய். 5 ஆயிரம் வீதம் ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது.

    சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர்கள் கெய்க்வாட், மனோகரன், சிவபெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×