பாலக்கோட்டில் வரி கட்டாத கடைகளுக்கு சீல்

பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமையில் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சொத்து வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாத கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும்,
பாலக்கோட்டில் வரி கட்டாத கடைகளுக்கு சீல்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள் வணிக நிறுவனங்கள் அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் வரி பாக்கி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

இதனை வசூல் செய்யும் விதமாக ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அமைத்து வரி செலுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுறுத்தியும் சில வணிக நிறுவனங்கள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ளனர்.

இதனை பாலக்கோடு தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமையில் உதவி அலுவலர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சொத்து வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.

மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சொத்து வரி தண்ணீர் வரி கட்டாத கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும், குடிதண்ணீர் இணைப்பை துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com