search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sealed for stores"

    • திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33).
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33). மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அமானுல்லா (53). இவர்கள் தங்களது மளிகைக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

    அதன்படி ஆவினங்குடி போலீசாரில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து போலீசாரின் பரிந்துரையின் பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 மளிகைக்கடை களுக்கும் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

    உரிமம் பெறாத கொளத்தூரில் உள்ள மளிகை கடை, டீ கடை, எலக்ட்ரிக்கல், துரித உணவகம் என 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    கொளத்தூர்:

    கொளத்தூர், திரு.வி.க நகர், பெரம்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் உரிமம் பெறாமலும் உரிமத்தை புதுப்பிக்காமலும் காலம் தாழ்த்தி வந்தனர்.

    இந்த கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் கொடுத்து எச்சரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் உரிமம் பெறாத கொளத்தூரில் உள்ள மளிகை கடை, டீ கடை, எலக்ட்ரிக்கல், துரித உணவகம் என 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேலும் தொடர்ந்து மற்ற கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று வருவாய் உதவி அலுவலர் டில்லி ராஜ் மற்றும் உரிமம் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையத்தில் 107 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டு, மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் முறையாக வாடகை செலுத்தி வந்த நிலையில், கடந்த 2016-ம்ஆண்டு அனைத்து கடைகளுக்கும் வாடகை இருமடங்காக உயர்த்தப்பட்டது.

    இதனால் பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் இதுவரை மொத்தம் ரூ.10 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் 3 செல்போன் கடைகள் உள்பட 7 கடைகளின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அதாவது 7 கடைகளின் உரிமையாளர்களும் சுமார் ரூ.4½ லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியை செலுத்தும்படி மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் விடுத்தும், அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கும்படி மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். ஒரே நேரத்தில் 7 கடைகளுக்கு அடுத்தடுத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாநகராட்சிக்கு இன்னும் பலர் வாடகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளது. அவர்கள் விரைவில் வாடகை பாக்கி செலுத்தவில்லை யெனில், அந்த கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்படும் என கூறினார்.

    ×