search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் பனி மூட்டம்"

    • வாகன ஓட்டிகள் சிரமம்
    • சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு முதல் குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை முதல் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிபொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதேபோல் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றன.

    சேரும் சகதியுமான சாலைகள்

    காட்பாடி பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், வேலூர் வேலப்பாடி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இதனால் தற்போது மழையின் காரணமாக சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.

    பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்த கூட செல்ல முடியாத அளவு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.

    பணிகள் முடிவடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர்.

    சேலம்:

    தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் தட்ப வெப்ப மாற்றம் ஏற்பட்டு, வானில் மேகக் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் பகலில் வெயில் தாக்கம் குறைவா–கவும், குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    இரவிலும் பனி நிலவுகிறது. இதனால் மக்கள் குளிரை தாங்க முடியாமல் திணறுகின்றனர். நேற்று மாலையில் சேலத்தின் சில இடங்களில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

    கடும் குளிர்

    இன்று காலையிலும் பனி மூட்டம் நிலவியது. குறிப்பாக சுற்றுலா தலங்க–ளான ஏற்காடு படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, ஏற்காடு அடிவாரம், சேர்வ ராயன் மலை, வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அடிவாரம், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, ஆத்தூர் அருகே கல்வராயன்மலை தொடர்ச்சியில் உள்ள முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி, மேட்டூர், ெகாளத்தூர் மலைபகுதிகளில் அதிக அளவில் பனி நிலவியது.

    இங்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயனாளிகள் இந்த குளிரை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர். எனினும் நடுங்க வைக்கும் குளிரில் மலையில் படர்ந்திருந்த மேக கூட்டத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.
    • மழை நின்றவுடன் மீண்டும் கடும் பனி நிலவியது.

    கொடைக்கானல்:

    வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது.

    இரவில் கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பனியின் தாக்கம் சற்று குறைந்தபோதிலும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்தது. மழை நின்றவுடன் மீண்டும் கடும் பனி நிலவியது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரல் மழை தொடங்கி இரவு வரை நீடித்தது. மீண்டும் நள்ளிரவு முதல் பெய்த மழை இன்று காலையிலும் தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடியே சென்றனர். கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் பெய்து வரும் சாரல் மழையால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் 3, கொடைக்கானல் 3.6, பழனி 1.5, நிலக்கோட்டை 7, வேடசந்தூர் 7.8, பிரையண்ட் பூங்கா 6.2 என மாவட்டத்தில் 33.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பனியும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.
    • வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அதக்கப்பாடி, சோமன அள்ளி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, மற்றும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பனியும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.

    குறிப்பாக பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. சுற்றிலும் மலைகளை சூழ்ந்துள்ள இப்பகுதியில் தான் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடமாகவும்,பல்வேறு நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாக உள்ளது.

    தற்போது மார்கழி மாதம் என்பதால்,பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் வாட்டுகிறது. வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள் இருப்பதால், அதி காலை நேரத்தில் குளிருக்கிடையே கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    அதுவும் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்ல மலைப்பாதை வழியாக செல்ல வேண்டி இருப்பதால் எதிரே வருபவர் யார் என தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டுக்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டு மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருவதால் அதிகாலையில் வயலுக்கு செல்லும் விவசாயிகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், செல்லும் விவசாயிகள் கடும் குளிரிலும் பணியிலும் அவதி க்குள்ளாகி வரு கின்றனர்.

    மேலும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவிலான கடும் பனிமூட்டமும் கடும் குளிரும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்
    • வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது கடந்த இரு தினங்களாக மழை இல்லாமல் லேசான பனிபொழிவு காணப்படுகிறது.

    வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சுமார் 10 மீட்டர் தொலைவில் உள்ள வாகனங்கள் கூட சரிவர தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி இயக்கி செல்கின்றனர்.

    இதனால் நெடுஞ்சாலையில் அதிக அளவில் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    ×