search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் பனி மூட்டம்: குளிரில் நடுங்கும் தருமபுரி மக்கள்
    X

    பனிபொழிவால்முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனம்.

    கடும் பனி மூட்டம்: குளிரில் நடுங்கும் தருமபுரி மக்கள்

    • பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பனியும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.
    • வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அதக்கப்பாடி, சோமன அள்ளி, பாலக்கோடு, நல்லம்பள்ளி, மற்றும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பனியும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.

    குறிப்பாக பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. சுற்றிலும் மலைகளை சூழ்ந்துள்ள இப்பகுதியில் தான் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடமாகவும்,பல்வேறு நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வரும் இடமாக உள்ளது.

    தற்போது மார்கழி மாதம் என்பதால்,பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் வாட்டுகிறது. வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள் இருப்பதால், அதி காலை நேரத்தில் குளிருக்கிடையே கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    அதுவும் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்ல மலைப்பாதை வழியாக செல்ல வேண்டி இருப்பதால் எதிரே வருபவர் யார் என தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டுக்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டு மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருவதால் அதிகாலையில் வயலுக்கு செல்லும் விவசாயிகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், செல்லும் விவசாயிகள் கடும் குளிரிலும் பணியிலும் அவதி க்குள்ளாகி வரு கின்றனர்.

    மேலும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவிலான கடும் பனிமூட்டமும் கடும் குளிரும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×