search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    கடும் பனி மூட்டம் மற்றும் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இன்று பகலிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.


    கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்தது.
    • மழை நின்றவுடன் மீண்டும் கடும் பனி நிலவியது.

    கொடைக்கானல்:

    வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது.

    இரவில் கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பனியின் தாக்கம் சற்று குறைந்தபோதிலும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்தது. மழை நின்றவுடன் மீண்டும் கடும் பனி நிலவியது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் சாரல் மழை தொடங்கி இரவு வரை நீடித்தது. மீண்டும் நள்ளிரவு முதல் பெய்த மழை இன்று காலையிலும் தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடியே சென்றனர். கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் பெய்து வரும் சாரல் மழையால் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் 3, கொடைக்கானல் 3.6, பழனி 1.5, நிலக்கோட்டை 7, வேடசந்தூர் 7.8, பிரையண்ட் பூங்கா 6.2 என மாவட்டத்தில் 33.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×