search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலா எலெக்ட்ரிக்"

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விவரம் அறிவிப்பு.
    • ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் S1 ஏர் ஸ்கூட்டர் மாடலுக்கான விற்பனை ஜூலை 28-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட ஒலா S1 ஏர் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த மாடலின் வினியோகம் இதுவரை துவங்காமல் இருக்கிறது.

    தற்போது ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஒலா S1 ஏர் மாடலை வாங்க முன்பதிவு செய்தவர்கள், ஜூலை 28-ம் தேதி இதனை வாங்கிட முடியும். இந்த மாடலுக்கான விற்பனை ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

     

    மற்றவர்கள் இந்த ஸ்கூட்டரை ஜூலை 31-ம் தேதியில் இருந்து வாங்கிட முடியும். இவர்களுக்கான விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒலா S1 ஏர் மாடலுக்கான வினியோகம் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது.

    ஒலா S1 ஏர் மாடலில் ஹப்-மவுன்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 4.5 கிலோவாட் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    • ஒலா S1 சீரிஸ் மாடல்களின் புதிய நிற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.
    • ஒலா எலெக்ட்ரிக் பைக் 350 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிகழ்வில் ஒலா S1 சீரிஸ் மாடல்களின் புதிய நிற வேரியண்ட்களை அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஒலா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முந்தைய டீசர்களின் போதே, இந்த மாடலுக்கான எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், இந்த மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என்ற தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

     

    புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக் முழு சார்ஜ் செய்தால் 300 முதல் 350 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்காக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக்-இல் குறைந்தபட்சம் 8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இது ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளதை விட இருமடங்கு பெரியது ஆகும். ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக்-இல் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த மோட்டார் வெளிப்படுத்தும் திறன், 150சிசி-யில் இருந்து 180சிசி கொண்ட பைக் மாடல்களுக்கு இணையாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ஏராளமான அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • ஒலா வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, வாகனம் பார்க் மோடிலேயே இருக்கும்.
    • இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெல்மெட் டிடெக்ஷன் தொழில்நுட்பத்திற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. காப்புரிமை நிலையில் இருக்கும் புதிய தொழில்நுட்பம் ஒலா நிறுவனத்தின் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ரைடர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒலா நிறுவனம் புதிய சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. இது ரைடர் ஹெல்மெட் அணியாத சூழலில், வாகனத்தை இயக்க அனுமதிக்காது. அதாவது ஹெல்மட் அணியாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், ஸ்கூட்டரை ரைட் மோடிற்கு மாற்ற அனுமதிக்காது.

     

    ஒலா வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, வாகனம் பார்க் மோடிலேயே இருக்கும். பிறகு, ஸ்கூட்டரை இயக்குவதற்கு ரைடு மோடிற்கு மாற்ற வேண்டும். ஒலா உருவாக்கி வரும் புதிய சிஸ்டம், ரைடர் ஹெல்மெட் அணியாமல் இருக்கும் போது வாகனத்தை ரைடு மோடில் மாற்ற அனுமதிக்காது. இதனை உறுதிப்படுத்த வாகனத்தில் கேமரா மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கான காப்புரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஒலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ADAS சிஸ்டம் வழங்குதாக டீசர் வெளியிட்டு இருந்தது. இந்த அம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர் வரும் மாதங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.

    • ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
    • புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் விரைவில் புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 சீரிசில் புதிய வாகனமாக இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய ஒலா S1 ஸ்கூட்டருக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும், தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்றே, பாட்-வடிவ எல்இடி ஹெட்லைட்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த ஒலா எலெக்ட்ரிக் நிறுவன உற்பத்தியாளரான ஒலா எலெக்ட்ரிக் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் #endICEAge நிகழ்வின் முதல் பாகத்தில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியிடப்பட இருக்கிறது. டீசர்களில் மூன்று ஹெட்லைட்கள் இருளில் பிரகாசமாக எரிவது போன்று காட்சியளிக்கிறது. மேலும் இதன் முன்புறம் சிறிய வின்ட்ஸ்கிரீன் காணப்படுகிறது.

    சமீபத்தில் தான் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களை மாற்றியமைத்தது. அதில் ஒலா S1 ஏர் மாடலின் 2 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் வெர்ஷன்கள் நிறுத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது ஒலா S1 ஏர் மாடல் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    • எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை.
    • டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை மாறி இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்டம் நேற்றுடன் ரத்தாகி விட்டது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விலை அதிகரிக்க துவங்கி விட்டது. அதன்படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

    தற்போதைய விலை உயர்வில் எண்ட்ரி லெவல் மாடலான ஒலா S1 ஏர் விலை மட்டும் மாற்றப்படவில்லை. மிட் ரேன்ஜ் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் ஒலா S1 மாடல் 2 கிலோவாட் ஹவர் மற்றும் 3 கிலோவாட் ஹவர் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    இது அதன் முந்தைய வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். டாப் எண்ட் மாடலான ஒலா S1 ப்ரோ விலை தற்போது ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுவும் அதன் முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் அதிகம் ஆகும். எண்ட்ரி லெவல் ஒலா S1 ஏர் மாடலின் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறி உள்ளது.

    முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், பெட்ரோல் மோட்டார்சைக்கிள் குறித்து நகைச்சுவையாக மீம் போடுவோருக்கு ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுபற்றிய அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.

    • ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர் என்று நம்பி முதற்கட்டமாக ரூ. 499 தொகையை முன்பணமாக செலுத்தினார்.
    • காவல் துறையினர், புகார் கொடுத்தவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை கொண்டு பாண்டாவை பிடித்தனர்.

    ஒலா எலெக்ட்ரிக் விற்பனையாளர் என கூறி ஏமாற்றி வந்த நபரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தானேவை அடுத்த டொம்பாலி பகுதியை சேர்ந்த ராஜேந்திர ஷர்மா பாண்டா என்ற நபர் 'ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டி' விற்பனையாளர் என்று கூகுள் தளத்தில் போலி விளம்பரங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதை பார்த்து ஸ்கூட்டரை வாங்க விரும்புவோரிடம் இவர் பணம் வசூலித்து ஏமாற்றி வந்துள்ளார்.

    அந்த வகையில், துவாராகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த நபரை பாண்டா ஏமாற்றி இருக்கிறார். இதையடுத்து ஏமாற்றப்பட்டவர் துவாரகா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புதாரை வைத்து முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாண்டாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

    முன்னதாக ஸ்கூட்டரை வாங்க பாண்டாவை அனுகிய நபர், பாண்டா ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாளர் என்று நம்பி முதற்கட்டமாக ரூ. 499 தொகையை முன்பணமாக செலுத்தியுள்ளார். பின் ஸ்கூட்டரை வாங்குவதற்காக ரூ. 80 ஆயிரத்து 999 தொகையை செலுத்தினார். ஒருவாரத்தில் ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படும் என்று பாண்டா இவரிடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், இவருக்கு ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படாமல் இருந்தது.

    இதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல் நிலையத்தின் உதவியை நாடியிருக்கிறார். காவல் துறையினர் புகார் கொடுத்தவர், பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை கொண்டு பாண்டாவை பிடித்தனர். காவல் துறையிடம் சிக்கிய பாண்டா தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

    • ஒலா S1 ப்ரோ வாடிக்கையாளர்களிடம் 2019 முதல் சார்ஜருக்கு தனியே கட்டணம் வசூலித்து வருகிறது.
    • ஒலா நிறுவனம் ஆஃப் போர்டு சார்ஜர்களை விற்று ரூ. 130 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜரை வாங்க தனியாக பணம் செலுத்திய தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆஃப் போர்டு சார்ஜர்களை விற்று ரூ. 130 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    சார்ஜருக்கு தனியாக கட்டணம் நிர்ணயிக்கும் ஒலா எலெக்ட்ரிக் முடிவுக்கு ARAI நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது. எனினும், தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க இருப்பதாக அறிவித்து இருப்பதால், ARAI நடவடிக்கை எடுக்கும் முடிவை ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    முந்தைய தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ வாடிக்கையாளர்களிடம் 2019 முதல் சார்ஜருக்கு தனியே கட்டணம் வசூலித்து வருவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சில எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் சார்ஜர் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்குவதற்காக தனியே கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    இவ்வாறு செய்வதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ஓரளவு குறைவாக நிர்ணயம் செய்ய முடியும். இதன் காரணமாக சில நிறுவனங்கள் அத்தியாவசிய பாகங்களான சார்ஜர்களுக்கும் தனியே கட்டணம் வசூலித்தன. இதன் மூலம் நிறுவனங்கள் ஒட்டுமொத்த விலை தவிர லாபத்தை அதிகப்படுத்த முடியும். 

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிப்பு.
    • சிறப்பு சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒலா நிறுவனத்தின் புதிய S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர், தற்போது அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்திய சந்தையில் ஒலா S1 ப்ரோ மாடலின் விலையில் ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒலா S1 ப்ரோ விலை தற்போது ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

    விலை குறைப்பு ஏப்ரல் 16 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என ஒலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது. பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 நிதியாண்டில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

     

    வழக்கமாக ஒலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது குறுகிய கால விலை குறைப்பில் இதன் விலை ரூ. 5 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒலா S1 ப்ரோ விலை குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் என மாறியுள்ளது.

    இந்திய சந்தையில் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டர்: கெருயா, ஜெட் பிளாக், பொர்சிலைன் வைட், நியோ மிண்ட், கோரல் கிளாம், லிக்விட் சில்வர், மேட் பிளாக், ஜெட் பிளாக், மிட்நைட் புளூ, ஆந்த்ரசைட் கிரே, மிலெனியல் பின்க் மற்றும் மார்ஷ்மெல்லோ என 12 விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஒலா S1 ப்ரோ அம்சங்கள்:

    ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இதில் உள்ள மோட்டார் 8.5 கிலோவாட் பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்லும். இதுதவிர 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன், மியூசிக் பிளேபேக், ரிவர்ஸ் மோட், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
    • தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது மார்ச் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் பங்குகள் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்திருப்பது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். சமீபத்திய மாதாந்திர விற்பனை விவரங்களை வைத்து பார்க்கும் போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக வாகனங்களை விற்பனை செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

     

    தற்போதைய நிதியாண்டில் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. 2022-23 நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. அதன்படி தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒலா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரை சுற்றி 20 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கின்றனர் என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 2 முதல் 4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக்குகளால் வித்தியாசப்படும் ஆறு மாடல்களை ஒலா எலெக்ட்ரிக் விற்பனை செய்து வருகிறது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 மற்றும் S1 ப்ரோ ஸ்கூட்டர்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்துள்ளது.
    • பழைய இருசக்கர வாகனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 45 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.

    ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. பயனர்கள் ஒலா S1 வாங்கும்போது ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பலன்களையும், ஒலா S1 ப்ரோ வாங்கும் போது ரூ. 4 ஆயிரம் வரையிலான பலன்களையும் பெறலாம்.

    பழைய ICE இருசக்கர வாகனத்தை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 45 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். ஒலா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் இந்த இரு ஸ்கூட்டர்களை வாங்கும் போது ரூ. 6 ஆயிரத்து 999 மதிப்பிலான பிரத்யேக பலன்களை பெறலாம். சிறப்பு சலுகைகள் மார்ச் 8 ஆம் தேதி துவங்கி மார்ச் 12 வரை வழங்கப்படுகிறது.

     

    இதுதவிர வார இறுதி நாட்களில் இந்த ஸ்கூட்டரை வாங்கும் போது ஒலா கேர் பிளஸ் சந்தாவில் 50 சதவீதம் தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஒலா கேர் மற்றும் ஒலா கேர் பிளஸ் போன்ற சந்தாக்களை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் வழங்கி வருகிறது. இவற்றின் கீழ் இலவச லேபர் ஆன் சர்வீஸ், தெஃப்ட் அசிஸ்டண்ஸ் உதவிஎண், ரோட்சைட் மற்றும் பன்ச்சர் அசிஸ்டண்ஸ் வழங்கப்படுகிறது.

    ஒலா கேர் பிளஸ் சந்தாவில் வருடாந்திர அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், இலவச பிக்கப்/டிராப் மற்றும் ஹோம் சர்வீஸ், 24/7 மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஒலா S1 விலை ரூ. 1 லட்சத்து 11 ஆயிரம் என துவங்குகிறது. ஒலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரம் என துவங்குகிறது.

    எண்ட்ரி லெவல் ஒலா S1 ஏர் மாடலின் விலை ரூ. 91 ஆயிரத்து 754 என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ஒலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி பேக் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய ஒலா S1 சீரிஸ் மாடல்களில் உள்ள பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. பல்வேறு ஸ்கூட்டர் மாடல்கள் தற்போது அதிக ரேன்ஜ் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக விலை கொண்ட மிகமுக்கிய பாகமாக அதன் பேட்டரிகள் உள்ளன.

    இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி விலை எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரியை மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 87 ஆயிரத்து 298 என கூறும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

     

    ஒலா 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் விலை ரூ. 87 ஆயிரத்து 298 என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டர் பேட்டரிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டி வழங்கி வருகிறது.

    இந்த தகவல்களின் படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை மாற்ற ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விலையில் இருந்து 62 சதவீதம் செலவிட வேண்டும் என தெரிகிறது. தற்போது ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டர் தள்ளுபடியை சேர்த்து ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர சமீபத்தில் ஒலா அறிமுகம் செய்த S1 ஏர் விலை ரூ. 84 ஆயிரத்து 999 ஆகும். 

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் உருவாகி வருகின்றன.
    • அடுத்த சில ஆண்டுகளில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எண்ட்ரி லெவல் S1 ஏர் ஸ்கூட்டர்களை நேற்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பல்வேறு விலைகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் டீசரை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் பல்வேறு பிரிவுகளில் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    புதிய டீசர்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் பைக் மாடல்களை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி பிரிவுகளில் இடம்பெற இருக்கிறது. புதிய மாடல்கள் தற்போது கான்செப்ட் நிலையில் இருக்கின்றன. புதிய டீசர் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஃபுலி ஃபேர்டு அட்வென்ச்சர், குரூயிசர் மற்றும் இரண்டு ஸ்டிரீட் பைக்குகள் என ஐந்து மாடல்களை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல்கள் அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல்களின் அம்சங்கள் ஒலா S1 சீரிசில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை ஒலா நிறுவனம் எவ்வாறு நிலைநிறுத்தும் என்பது சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவற்றில் சில மாடல்களின் விலை சற்று போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ×