search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    கிட்ட வந்தாச்சு.. ஒலா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    கிட்ட வந்தாச்சு.. ஒலா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு எப்போ தெரியுமா?

    • ஒலா S1 சீரிஸ் மாடல்களின் புதிய நிற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.
    • ஒலா எலெக்ட்ரிக் பைக் 350 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிகழ்வில் ஒலா S1 சீரிஸ் மாடல்களின் புதிய நிற வேரியண்ட்களை அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஒலா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முந்தைய டீசர்களின் போதே, இந்த மாடலுக்கான எதிர்பார்ப்பு எழுந்தது. எனினும், இந்த மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என்ற தகவல், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக் முழு சார்ஜ் செய்தால் 300 முதல் 350 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்காக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக்-இல் குறைந்தபட்சம் 8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    இது ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளதை விட இருமடங்கு பெரியது ஆகும். ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக்-இல் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த மோட்டார் வெளிப்படுத்தும் திறன், 150சிசி-யில் இருந்து 180சிசி கொண்ட பைக் மாடல்களுக்கு இணையாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ஏராளமான அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×