search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலா எலெக்ட்ரிக்"

    • இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் செல்லும்.
    • முன்னதாக ஒலா S சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முற்றிலும் புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், ஒலா S1 X மாடல்- ஃபன்க், ஸ்டெல்லார், ரெட் வெலாசிட்டி, வோக் மற்றும் மிட்நைட் என ஐந்து டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் அதிக பிரகாசமாகவும், சிங்கில் டோன் நிறங்களை விட அதிக வித்தியாசமாகவும் காட்சியளிக்கின்றன.

    நிறங்கள் தவிர ஒலா S1 X மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒலா S1 X மாடலில் 2.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

     


    இதே ஸ்கூட்டர் 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 151 கிலோமீட்டர்கள் மற்றும் 190 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தது. இவை இம்மாத இறுதிவரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக பிப்ரவரி மாதத்தில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க அதிகளவில் முன்பதிவுகளை பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

    • மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • விலை குறைப்பு இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது s1 எக்ஸ் பிளஸ், s1 ஏர் மற்றும் s1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்துள்ளது. இவற்றின் விலை அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு இம்மாத இறுதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைப்பின் படி ஒலா s1 எக்ஸ் பிளஸ் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒலா s1 ஏர் விலை ரூ. 15 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. ஒலா s1 ப்ரோ விலை ரூ. 17 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் என மாறி இருக்கிறது.

     


    விலை மாற்றம் தவிர இந்த ஸ்கூட்டர்களில் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை. ஒலா s1 ப்ரோ மாடலில் 11 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    • மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    • 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 X ஸ்கூட்டரின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய வெர்ஷனில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒலா S1 X வெர்ஷனின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 190 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 30 நிமிடங்கள் வரை ஆகும். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

     


    அதிக திறன் கொண்ட பேட்டரி காரணமாக இந்த வேரியண்ட் ஸ்டான்டர்டு S1 X-ஐ விட 4 கிலோ அதிக எடை கொண்டிருக்கிறது. இவை தவிர மற்ற அம்சங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    புதிய வேரியண்ட் உடன் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒலா S1 சீரிசின் ஒட்டுமொத்த வேரியண்ட்களுக்கும் வாடிக்கையாளர்கள் வாரண்டியை நீட்டிக்க முடியும். இதற்கு வாடிக்கையாளர்கள் ரூ. 5 ஆயிரம் செலுத்தி 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி பெறலாம்.

    ஒலா S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் ரெட் வெலோசிட்டி. மிட்நைட், வோக், ஸ்டெல்லார், ஃபன்க், போர்சிலைன் வைட் மற்றும் லிக்விட் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    • புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தியது.
    • புது அப்டேட் மூலம் நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. தொடர்ச்சியாக புது அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஒலா எலெக்ட்ரிக் தனது வாகனங்களுக்கு புதிய மென்பொருள் அப்டேட் வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    அதன்படி ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஓவர்-தி-ஏர் (ஓ.டி.ஏ.) முறையில் மூவ் ஒ.எஸ். 4 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இது வாகனங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த அனுபவத்தை அடியோடு மாற்றும் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    புதிய மூவ் ஒ.எஸ். 4 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஒலா S1 ஜென் 1, மேம்பட்ட S1 ப்ரோ மற்றும் S1 ஏர் மாடல்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒலா S1 X பிளஸ் மாடல்களுக்கு வரும் மாதங்களில் இந்த அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த அப்டேட் மூலம் நேவிகேஷன் வசதி இதற்கு முன்பு இருந்ததை விட அதிவேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஒ.எஸ்.-இன் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிமையாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹில் டிசென்ட் கண்ட்ரோல், இகோ மோடில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இவைதவிர புதிய அப்டேட் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் உள்ள "கேர்" மோட் பயனர்களுக்கு காற்று மாசு அளவு குறித்த தகவல்கள் மற்றும் சேமிப்பு குறித்த விவரங்களை வழங்குகிறது.

    • நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
    • சிறப்பு சலுகைகள் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஜனவரி 15-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஓலா S1 X பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. ஓலா S1 ப்ரோ மற்றும் ஓலா S1 ஏர் மாடல்களை வாங்கும் போது ரூ. 6 ஆயிரத்து 999 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

     


    இவைதவிர தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பணம் செலுத்தாமல் வாகனம் வாங்கும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, 7.99 சதவீத வட்டி போன்ற நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 X - S1 X (பேஸ்), S1 X (3 கிலோவாட் ஹவர்) மற்றும் S1 X பிளஸ் - S1 ஏர் மற்றும் S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    ஓலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்றும் S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது.
    • சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து டிசம்பர் 21-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 647 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் ஒரே ஆண்டிற்குள் 2.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த முதல் எலெக்ட்ரிக் இருசக்கர நிறுவனமாக உருவெடுத்தது.

    இதன் மூலம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வருடாந்திர விற்பனையில் 131 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் 1 லட்சத்து 09 ஆயிரத்து 395 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓலா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 20 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து வருகிறது.

     


    இந்த ஆண்டு ஜனவரியில் 18 ஆயிரத்து 353 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், மார்ச் மாதத்தில் 21 ஆயிரத்து 434 யூனிட்களை ஓலா எலெக்ட்ரிக் விற்பனை செய்தது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சம் 29 ஆயிரத்து 898 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் 12 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் ஓலா எலெக்ட்ரிக் சந்தை மதிப்பு 30.50 சதவீதமாக இருக்கிறது.

    ஓலா தவிர்த்து டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 399 யூனிட்களையும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 1 லட்சத்து 01 ஆயிரத்து 490 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு முறையே 19.60 மற்றும் 12.30 ஆக உள்ளது. 

    • ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
    • ரூ. 24 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும்.

    பெங்களூரை சேர்ந்த ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் இ.வி. ஃபெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 16-ம் தேதி துவங்கியது. இதில் பயனர்கள் ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது அதிகபட்சம் ரூ. 24 ஆயிரத்து 500 வரையிலான பலன்களை பெற முடியும்.

    இதில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து ஆண்டுகளுக்கு பேட்டரி வாரண்டி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலை வாங்குவோருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டியும், S1 ஏர் மாடலை வாங்கும் போது 50 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களின் பழைய பெட்ரோல் இருசக்கர வாகனத்தை கொடுத்து ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் பெற முடியும்.

    மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு மாத தவணை முறை சலுகைகளுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவைதவிர முன்பணம் இன்றி, சேவை கட்டணங்கள் இன்றி, 5.99 சதவீத வட்டியில் நிதி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு பரிந்துரை செய்து ஒலா கேர் பிளஸ் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். புதிய திட்டத்தின் கீழ் பயனர்கள் ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.

    இந்திய சந்தையில் ஒலா நிறுவனம் தற்போது S1X, S1 ஏர், S1 ப்ரோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் S1 ப்ரோ ஜென் 2 மாடலின் வினியோகத்தை சமீபத்தில் துவங்கியது.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சமீபத்திய S1 X மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய மாடல்களில் அதிக அம்சங்கள் கொண்ட டாப் எண்ட் வேரியண்ட் ஒலா S1 ப்ரோ ஆகும்.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 75 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் ஒலா நிறுவனம் S1 ஏர், S1 X மற்றும் S1 ப்ரோ போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தான் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்பதிவு குறித்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. எனினும், எந்த மாடலுக்கு எத்தனை யூனிட்கள் முன்பதிவு கிடைத்தன என்பது பற்றி ஒலா சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     

    ஒலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் குறைந்த விலை மாடலாக ஒலா S1 X இருக்கிறது. இந்த மாடல் - S1 X+, S1 X 2கிலோவாட் ஹவர் மற்றும் S1 X 3கிலோவாட் ஹவர் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் அதிக விலை கொண்ட மாடல் ஒலா S1 ப்ரோ.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரைடிங் ரேன்ஜ் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒலா S1 X மற்றும் S1 ப்ரோ மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் S1 ஏர் மாடல் கணிசமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    • ஒலா S1 ப்ரோ ஜென் 2 மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஒலா ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் S1 ப்ரோ ஜென் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் வகையில், உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய மாடலிலும், அதன் முந்தைய வெர்ஷனை போன்று வளைந்த மற்றும் பெரிய சைடு பேனல்கள், டுவின் ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் மோனோஷாக் மற்றும் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளுக்கு மாற்றாக புதிய மாடலில் ரியர் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாற்றங்கள் தவிர்த்து, புதிய S1 ப்ரோ ஜென் 2 மாடலின் ரேன்ஜ் மற்றும் வேகத்தை ஒலா நிறுவனம் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் 195 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் மற்றும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ப்ரோ ஜென் 2 ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 499, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஜென் 1 மாடலை விட ரூ. 7 ஆயிரம் வரை அதிகம் ஆகும். இதன் மூலம் ஒலா நிறுவனம் ஒலா S1 ப்ரோ, S1 ஏர் மற்றும் S1X போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    • ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒலா S1X என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் S1X (2 கிலோவாட் ஹவர்), S1X மற்றும் S1X பிளஸ் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கின்றன. டிசைனிங்கை பொருத்தவரை ஒலா S1X மாடல் தோற்றத்தில் S1 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் ஹெட்லைட் கவர் மச்சும் சற்று பெரியதாக காட்சியளிக்கின்றன. இத்துடன் டுவின் எல்.இ.டி. ப்ரோஜெக்டர்கள் மற்றும் இதனை சுற்றி எல்.இ.டி. பெசல்கள் உள்ளன. இத்துடன் ஃபிளாட் ஃபுளோர்-போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹேன்டில்பார் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட மிரர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டூ-டோன் பெயின்ட் ஆப்ஷனில் கிடைக்கிறது.

     

    ஒலா S1X பேஸ் வேரியன்டில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மிட்-ரேன்ஜ் மற்றும் பிளஸ் வேரியன்ட்களில் முறையே 3 கிலோவாட் ஹவர் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் இவற்றின் அம்சங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த மாடல் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய S1X ஹார்டுவேர் அம்சங்களும் அதன் S1 ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அந்த வைகயில், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    விலை விவரங்கள்:

    ஒலா S1X (2 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 89 ஆயிரத்து 999

    ஒலா S1X (3 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 99 ஆயிரத்து 999

    ஒலா S1X (4 கிலோவாட் ஹவர்) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999

    புதிய ஸ்கூட்டர் அறிமுகம் காரணமாக ஒலா S1 ஏர் விலை தற்போது ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

    குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    • ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி, 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய ஒலா S1 மாடலில் எல்இடி இலுமினேஷன், டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் ஒலா நிறுவனம் தனது S1 வேரியன்டை நிறுத்திய நிலையில், புதிய ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.

    டீசரின் படி புதிய ஒலா ஸ்கூட்டர் சற்று வித்தியாசமான ஹேண்டில்பார் மற்றும் ஸ்விட்ச் கியூப்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட கண்ணாடிகள், புதிய ஹெட்லைட் கவுல் வழங்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டரில் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    இவைதவிர புதிய ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த டிசைன் ஒரே மாதிரியே இருக்கும் என்று தெரிகிறது. புதிய ஒலா ஸ்கூட்டரின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், புதிய ஸ்கூட்டர் ஒலா S1 ஏர் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்பதால், அதன் அம்சங்கள் மற்றும் ரேன்ஜ் சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.

    தற்போது விற்பனை செய்யப்படும் ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    புதிய ஒலா S1 மாடலில் எல்இடி இலுமினேஷன், டிஜிட்டல் கன்சோல், இரண்டு ரைடு மோட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் புதிய ஒலா ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஒலா S1 ஏர் மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஒலா S1 ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது.
    • இந்திய சந்தையில் ஒலா S1 ஏர் மாடல் மொத்தத்தில் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ஏர் மாடல் முன்பதிவை ஜூலை 27-ம் தேதி துவங்கியது. இந்த ஸ்கூட்டரை வாங்க சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டனர். இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், இந்த விலை ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அதன்பிறகு, ஒலா S1 ஏர் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து ஒலா S1 ஏர் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.

     

    ஒலா S1 ஏர் மாடலில் 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 4.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 125 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. தோற்றத்தில் இந்த மாடல் ஒலா S1 மற்றும் S1 ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது.

    எனினும், இந்த மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பிலாட் புளோர்போர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர டுவின் ப்ரோஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள், வளைந்த பக்கவாட்டு பேனல்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் 7-இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், மியூசிக் பிளேபேக், மூன்று ரைடு மோட்கள், ரிவர்ஸ் மோடு, ரிமோட் பூட் லாக்/அன்லாக், சைடு ஸ்டான்டு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஒலா S1 ஏர் மாடல் ஸ்டெல்லார் புளூ, நியான், பொர்சிலைன் வைட், கோரல் கிளாம், லிக்விட் சில்வர் மற்றும் மிட்நைட் புளூ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஏத்தர் 450S மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×