ஒலா S1 ஸ்கூட்டருக்கு மீண்டும் கேஷ்பேக் சலுகை அறிவிப்பு!

ஒலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு அந்நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருந்தது. தற்போது ஒலா S1 ஸ்கூட்டருக்கு புதிய கேஷ்பேக் சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒலா S1 ஸ்கூட்டருக்கு மீண்டும் கேஷ்பேக் சலுகை அறிவிப்பு!
Published on

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே வழங்கப்படும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று ஒலா S1 மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சலுகைகளில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் நிலையில், கேஷ்பேக் சலுகை டிசம்பர் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 97 ஆயிரத்து 999 என மாறி விடும், அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இவை தவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் போது மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் முறை, குறைக்கப்பட்ட வட்டி, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு மாத தவணைகளில் தள்ளுபடி, பிராசஸிங் கட்டணத்தில் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சலுகைகள் மட்டுமின்றி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் மூவ் ஒஎஸ் 3 அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்க இருக்கிறது. தற்போது இந்த ஒஎஸ் பீட்டா முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இறுதி வெர்ஷன் OTA முறையில் வழங்கப்பட இருக்கிறது. புதிய மூவ் ஒஎஸ் 3.0 ஸ்கூட்டரை ஓட்டும் போது சவுண்ட்-டிராக், ஹில் ஹோல்டு, ரிஜெனரேடிவ் பிரேக்கிங் மற்றும் சில அம்சங்களை ஸ்கூட்டர்களில் வழங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com