search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ரூ. 84 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 84 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இந்தியாவில் அறிமுகம்

    • புதிய ஒலா S1 ஏர் மாடல்கள் ஒலா S1 ப்ரோவை விட 25 கிலோ வரை குறைந்த எடை கொண்டிருக்கின்றன.
    • இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத் சப்போர்ட், மூவ் ஒஎஸ் 3 மூலம் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிதாக எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் முதல் S1 ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது புதிய ஒலா S1 ஏர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போதைய அறிவிப்பின் படி 2.5 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் நீக்கப்பட்டு, 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் அதே விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதோடு சற்றே குறைந்த விலையில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் எண்ட்ரி லெவல் மாடல் 85 கிமீ ரேன்ஜ், புதிய 3 கிலோவாட் ஹவர் பேட்டரி மாடல் 125 கிமீ ரேன்ஜ் மற்றும் டாப் எண்ட் மாடல் 165 கிமீ ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளன. இவை அனைத்திலும் 4.5 கிவோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது.

    இத்துடன் இந்த மாடல்களின் எடை 99 கிலோ, 103 கிலோ மற்றும் 107 கிலோ என ஒவ்வொரு மாடலும் வேறுப்படுகிறது. இவை ஒலா S1 ப்ரோ மாடலை விட 25 கிலோ வரை குறைந்த எடை கொண்டிருக்கின்றன. இவற்றில் 34 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ், 7.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத் சப்போர்ட், மூவ் ஒஎஸ் 3 மூலம் ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டுவின் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவற்றில் டிஸ்க் பிரேக்கிற்கு மாற்றாக டிரம் பிரேக்குகளே வழங்கப்பட்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரம்:

    ஒலா S1 ஏர் மாடல் நியோ மிண்ட், ஜெட் பிளாக், கோலர் கிலாம், போர்சிலெயின் வைட் மற்றும் லிக்விட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒலா S1 ஏர் 2 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என்றும் 3 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் 4 கிலோவாட் ஹவர் மாடல் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். இவற்றின் விற்பனை விரைவில் துவங்க உள்ளன. வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் துவங்க இருக்கிறது. மாடல்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் வினியோகத்தில் மூன்று மாதங்கள் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×