ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இலவசமாக அம்சங்களை வழங்கும் மூவ் ஒஎஸ் 3

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு இம்மாத இறுதி வரை அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கூடுதல் அம்சங்களை வழங்க தொடர்ந்து புது ஒஎஸ் அப்டேட்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இலவசமாக அம்சங்களை வழங்கும் மூவ் ஒஎஸ் 3
Published on

ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் வழங்கி வருகிறது. மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஸ்கூட்டர்களின் செயல்திறன், ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதோடு புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் மூவ் ஒஎஸ் 3 ஆகும். இந்த அப்டேட் தீபாவளி சமயத்தில் வெளியாக இருந்த நிலையில், திடீரென வெளியீடு தாமதமானது.

முன்னதாக மூவ் ஒஎஸ் 2.0 வெளியீடும் பலமுறை தாமதமானது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஒலா S1, S1 ஏர் மற்றும் S1 ப்ரோ என மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்கூட்டர்கள் வரிசையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. புதிய மூவ் ஒஎஸ் 3 ஸ்கூட்டர்களுக்கு 50 புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.

இதில் ஹில் ஹோல்டு, மூட்ஸ், ரிஜென் வி2, பிராக்சிமிட்டி லாக், கீ ஷேரிங், காலிங், ஹைப்பர் சார்ஜிங் உள்ளிட்டவை ஒலா எலெக்ட்ரிக் ஏற்கனவே அறிவித்து தற்போது வழங்கி இருப்பவை ஆகும். புது அம்சங்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளை மேம்படுத்தி இருப்பதாக ஒலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. இந்த அப்டேட் ஆக 4.5 நொடிகள் ஆகும்.

புது அப்டேட்டை தொடர்ந்து ஒலா ஸ்கூட்டர்களை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதோடு ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த ரேன்ஜ் இரண்டில் இருந்து அதிகபட்சம் ஐந்து சதவீதம் வரை சிறப்பாக அதிகரித்து இருக்கிறது. இவை தவிர இந்த அப்டேட் ஸ்கூட்டரில் ஏராளமான அம்சங்களை வழங்கி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com