search icon
என் மலர்tooltip icon

    பைக்

    ஐந்து புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் ஒலா எலெக்ட்ரிக்
    X

    ஐந்து புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் ஒலா எலெக்ட்ரிக்

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் உருவாகி வருகின்றன.
    • அடுத்த சில ஆண்டுகளில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எண்ட்ரி லெவல் S1 ஏர் ஸ்கூட்டர்களை நேற்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பல்வேறு விலைகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் டீசரை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு உள்ளது. டீசர்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன துறையில் பல்வேறு பிரிவுகளில் களமிறங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    புதிய டீசர்களின் படி ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் பைக் மாடல்களை உருவாக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி பிரிவுகளில் இடம்பெற இருக்கிறது. புதிய மாடல்கள் தற்போது கான்செப்ட் நிலையில் இருக்கின்றன. புதிய டீசர் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஃபுலி ஃபேர்டு அட்வென்ச்சர், குரூயிசர் மற்றும் இரண்டு ஸ்டிரீட் பைக்குகள் என ஐந்து மாடல்களை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல்கள் அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல்களின் அம்சங்கள் ஒலா S1 சீரிசில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை ஒலா நிறுவனம் எவ்வாறு நிலைநிறுத்தும் என்பது சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவற்றில் சில மாடல்களின் விலை சற்று போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×