search icon
என் மலர்tooltip icon

    பைக்

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஒலா எலெக்ட்ரிக்
    X

    உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஒலா எலெக்ட்ரிக்

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 சீரிசில் மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ் நாட்டின் கிருஷ்னகிரி மாவட்டத்தில் உள்ள பியூச்சர்பேக்டரி ஆலையில் இருந்து 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வந்தது.

    தற்போது ஒரு லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய பாதி நேரமோ போதுமானது என ஒலா எலெக்ட்ரிக் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் இதற்கு காரணம் ஆகும்.

    பண்டிகை காலக்கட்டத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அக்டோபர் 2022 மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனை 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர விற்பனை 60 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    மேலும் இந்தியாவில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், ஒலா S1 ஏர் பெயரில் புது ஸ்கூட்டரை ஒலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்து இருக்கிறது. ஒலா S1 சீரிசில் புது வேரியண்டாக இது அமைந்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. வினியோகம் ஏப்ரல் 2023 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×