search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்ததாரர் கைது"

    • சபரிவாசன், ராஜ்குமார் ஆகியோர் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் அருகே பண்ணந்தூரை அடுத்துள்ள சாதி நாய்கன்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருப்பணியின் ஒரு பகுதியாக சிமெண்டு சிற்பங்கள் செய்யும் பணியில், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), சிதம்பரம் வயலூரை சேர்ந்த சபரிவாசன் (58) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து பாரூர் போலீசார் மேலும் இந்த கோவில் திருப்பணிக்கு புதிதாக வந்திருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த கணேசன், கடலூர் மாவட்டம் வன்னியபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 2 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசன் என்பவர் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் தான் கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டார். கணேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் சபரிவாசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு கோவிலில் வேலை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் தெரிவித்தனர். அதனால் நான் அவரை கண்டித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால் அவர்கள் இருவரையும் நான் இரும்பு கரண்டியால் அடித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கணேசன் மீது வழக்குபதிவு செய்து நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • கட்டிடத்தை இடிக்கும் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால் சாலையோரம் நடந்து சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன், பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் பழமையான கட்டிடத்தை இடிக்கும் போது பெண் என்ஜினீயர் பத்மபிரியா இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

    கட்டிடத்தை இடிக்கும் போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால் சாலையோரம் நடந்து சென்றவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரர் ஜாகீர் உசேன், பொக்லைன் உரிமையாளர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கட்டிடத்தை இடிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர் அப்துல்ரகுமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தற்போது ரஞ்சித் சென்னையில் ஒப்பந்த வேலைகள் செய்து வந்தார். அக்காநாயக்கன்பட்டிக்கு வேறு வழக்கு விசாரணைக்காக நேற்று மாலை வந்துள்ளார்.
    • அந்தப் பகுதியில் அய்யாதுரை அவரது மகன் கலாநிதி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ரஞ்சித் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    புதியம்புத்தூர்:

    ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அக்காநாயக்கன்பட்டியில் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் அய்யாதுரை. (வயது60).

    இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    தற்போது ரஞ்சித் சென்னையில் ஒப்பந்த வேலைகள் செய்து வந்தார். அக்காநாயக்கன்பட்டிக்கு வேறு வழக்கு விசாரணைக்காக நேற்று மாலை வந்துள்ளார்.

    அப்போது அந்தப் பகுதியில் அய்யாதுரை அவரது மகன் கலாநிதி (40) ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ரஞ்சித் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் அரிவாளால் சரமாரியாக அவர்களை வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் அய்யாதுரை, கலாநிதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக புகாரின் பேரில் புளியம்பட்டி போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×