search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகூ"

    • ஐகூ நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 64MP பிரைமரி கேமரா, OIS கொண்டிருக்கிறது.

    ஐகூ நிறுவனம் தனது ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP இரண்டாவது லென்ஸ், ரிங் எல்.இ.டி., 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனினை 22 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.

     

    ஐகூ Z7 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர்

    மாலி-G610 MC4 GPU

    8 ஜி.பி. LPDDR4X ரேம்

    128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 2.2 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் புளூ லகூன் மற்றும் கிராஃபைட் மேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் செப்டம்பர் 5-ம் தேதி துவங்குகிறது.

    • ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை பலமுறை வெளியிடப்பட்டு இருந்தது.
    • ஸ்மார்ட்போனின் முன்புற டிசைன் தோற்றத்தில் விவோ Y78 பிளஸ் 5ஜி போன்று காட்சியளிக்கிறது.

    ஐகூ நிறுவனம் தனது Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 31-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    முன்னதாக ஐகூ நிறுவனம் ஐகூ Z7 மற்றும் Z7S 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. மேலும், புதிய ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர்களை மட்டும் வெளியிட்டு வந்தது. எனினும், இதன் அறிமுக தேதி மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தது.

     

    தற்போது ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்துடன் அதன் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறார். புகைப்படத்தின் படி ஸ்மார்ட்போனின் மத்தியில் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சற்றே வளைந்த ஸ்கிரீன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஸ்மார்ட்போனின் முன்புற டிசைன் தோற்றத்தில் விவோ Y78 பிளஸ் 5ஜி போன்றே காட்சியளிக்கிறது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விவோ V29 லைட் 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ஸ்மார்ட்போன்களுக்கு அதிக சலுகைகள் வழங்கும் ஐகூ நிறுவன சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது.
    • ஐகூ நிறுவன பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு.

    ஐகூ இந்தியா நிறுவனம் அமேசான் வலைதளத்தில் ஐகூ குவெஸ்ட் டேஸ் சேல்-ஐ அறிவித்து இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஐகூ ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகைகள், தள்ளுபடி, வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐகூ குவெஸ்ட் டேஸ் சேலில், ஐகூ 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு உடனடி பெற முடியும். இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை ஜூலை 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ஐகூ நியோ 7 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 32 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ நியோ 7 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 35 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 49 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 54 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ 9 SE 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 28 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ 9 SE 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 26 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 3 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 30 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • ஐகூ நியோ 7 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் வசதி உள்ளது.
    • ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.

    ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டாப் எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஐகூ நியோ சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 7 ப்ரோ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 4013mm² VC கூலிங் மற்றும் மல்டி-லேயர் கிராஃபைட் மூலம் ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் தடுக்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி வரையிலான ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம், பிரத்யேக கேமிங் சிப் வழங்கப்பட்டு உள்ளது.

     

    புகைப்படங்களை எடுக்க 50MP சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 8 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.

    புதிய ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் டார்க் ஸ்டாம், ஏஜி கிளாஸ் பேக் மற்றும் பியர்லெஸ்ஃபிளேம் மற்றும் வீகன் லெதர் பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஜூலை 18-ம் தேதி வரை அறிமுக சலுகையாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் வடிவில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

     

    ஐகூ நியோ 7 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் பிலாஷ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 15-ம் தேதி அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனைக்கு வருகிறது.

    • ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடல் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கலாம்.
    • ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம்.

    ஐகூ நிறுவனம் தனது புதிய ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முதல் டீசரில் போனின் பின்புறம் லெதர் போன்ற ஃபினிஷ் கொண்டிருக்கும் என்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆக இருக்கும் என்று கூறப்பட்டது. ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஐகூ நியோ 7 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும். ஐகூ நியோ 7 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. இது பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு உள்ளது.
    • புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS+EIS, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    ஐகூ பிராண்டின் முற்றிலும் புதிய ஐகூ Z7s 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஐகூ Z7 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து புதிய Z7s மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் 6.38 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் Z7s மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்பட இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS+EIS, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ஐகூ Z7s அம்சங்கள்:

    6.38 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

    64MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி , டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ Z7s 5ஜி ஸ்மார்ட்போன் நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ/ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
    • ஐகூ பிராண்டின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது ஐகூ. 2020 வாக்கில் இந்தியாவில் கால்பதித்த ஐகூ பிராண்டு பல்வேறு ஸ்மமார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.

    ஐகூ இதுவரை அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐகூ நிறுவனத்தின் சமீபத்திய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தலைசிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிநவீன ரேம் மற்றும் மெமரி உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ. 59 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    எனினும், ஆண்டு விழா சிறப்பு விற்பனையை ஒட்டி ஐகூ 11 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐகூ 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக ஐகூ 9 விலை ரூ. 42 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதனை ரூ. 30 ஆயிரத்து 990 விலையிலேயே வாங்கிட முடியும். இது ஐகூ 9 ஸ்மார்ட்போனின் பழைய விலையை விட ரூ. 12 ஆயிரம் வரை குறைவு ஆகும். ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ. 64 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஐகூ நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐகூ நியோ 6 5ஜி மாடல் விலை தற்போது ரூ. 24 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.

    ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஐகூ ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • ஐகூ நிறுவனத்தின் புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
    • ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் பெற இருக்கிறது.

    ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13 கொண்டிருக்கும் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யுரிட்டி பேட்ச்களை பெற இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, EIS, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     

    பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.

    ஐகூ Z7 5ஜி அம்சங்கள்:

    6.38 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    ஸ்காட் சென்சேஷன் கிளாஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர்

    மாலி G-68 MC4 GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 13

    64MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் சென்சார்

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    4500 எம்ஏஹெச் பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    அறிமுக சலுகையாக புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. விவோ இ ஸ்டோரில் ரூ. 1000 இ ஸ்டோர் வவுச்சர் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    • ஐகூ நிறுவனத்தின் Z7 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஐகூ Z7 5ஜி மாடலின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

    ஐகூ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை Z சீரிஸ் ஸ்மார்ட்போனினை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் விலை விவரங்களை ஐகூ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் Z6 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் பேஸ் வேரியண்டில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் மற்றொரு மாடலில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    அறிமுக சலுகையாக புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 1500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ஐகூ Z7 5ஜி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 17 ஆயிரத்து 499 என்றும் 8 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என்றும் மாறிவிடும்.

    இத்துடன் புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியையும் ஐகூ அறிவித்து இருக்கிறது. ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போன் நார்வே புளூ மற்றும் பசிபிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

    ஐகூ Z7 5ஜி அம்சங்கள்:

    புதிய ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ ரெசல்யுஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 6, டூயல் சிம் 5ஜி, ப்ளூடூத் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க டூயல் 64MP OIS கேமரா வழங்கப்படுகிறது. இதில் உள்ள 4 வாட் ஃபிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 25 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். 

    • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் OIS வசதி கொண்ட பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசரில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் பெயர் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், படத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பின்புறம் Z7 என எழுதப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் இது என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது நிபுன் மர்யா வெளியிட்டு இருக்கும் டீசர் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் டிசைன் தெரியவந்துள்ளது. இது தோற்றத்தில் கிட்டத்தட்ட விவோ T1x போன்றே காட்சியளிக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், இரண்டு கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் OIS வசதி வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. கேமரா சென்சாரை தொடர்ந்து எல்இடி ஃபிளாஷ் அருகில் "Photography High Definition" என எழுதப்பட்டு இருக்கிறது. பேக் பேனலின் கீழ்புறத்தில் ஐகூ பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் டியல் நிறம் கொண்டிருப்பது தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது. புதிய ஐகூ Z7 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். முந்தைய ஐகூ Z சீரிஸ் மாடல்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐகூ Z7 சீரிசில் ஐகூ Z7 5ஜி மற்றும் Z7 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இவை I2207 மற்றும் I2213 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றிய தகவல்கள் மற்றும் இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்.

    • ஐகூ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
    • புதிய ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆல்ஃபா மற்றும் லெஜண்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. முன்னதாக அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டும் பிரத்யேக விற்பனை துவங்கியதை அடுத்து தற்போது அனைவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஐகூ ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது. புதிய ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐகூ 11 5ஜி மாடலில் 6.78 இன்ச் 2K E6 AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், LTPO 4.0 தொழில்நுட்பம், 300Hz டச் சாம்ப்லிங் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 13MP டெலிபோட்டோ / போர்டிரெயிட் சென்சார், 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செல்ஃபி எடுக்க 16MP கேமரா சென்சார் உள்ளது.

    விலை விவரங்கள்:

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ஆல்ஃபா மற்றும் கிளாஸ் பேக் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, சிலிகான் லெதர் பேக் மற்றும் பிஎம்டபிள்யூ டிசைன் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அறிமுக சலுகைகளை பொருத்தவரை ஐகூ 11 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை பரிவர்த்தனைகளின் போது ரூ. 5 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இத்துடன் கூடுதலாக கூப்பன் தள்ளுபடி ரூ. 1000 மற்றும் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. வட்டியில்லா மாத தவணை முறை மாதம் ரூ. 1,373-இல் இருந்து துவங்குகிறது. எக்சேன்ஜ் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    ஐகூ 11 அம்சங்கள்:

    6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்

    256 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    13MP 2x டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    • ஐகூ நிறுவனத்தின் புது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
    • இதில் சாம்சங் E6 AMOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஃபிளாஷிப் ஸ்மார்ட்போன்- ஐகூ 11 அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் QHD+ சாம்சங் E6 AMOLED வளைந்த ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட், LTPO 4.0 தொழில்நுட்பம், 300Hz டச் சாம்ப்லிங் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐகூ உருவாக்கிய LTPO தொழில்நுட்பம் ஒரு ஸ்கிரீனில் ஒரே சமயத்தில் 60Hz மற்றும் 120Hz என இருவித ரிப்ரெஷ் ரேட்களை செயல்படுத்தும் என ஐகூ தெரிவித்து இருக்கிறது.

    இது போன்ற டிஸ்ப்ளே அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டு அறிமுகமாகி இருக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ 11 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் ஏவியேஷன் கிரேடு அலுமினியம் ஃபிரேம் உள்ளது. இத்துடன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி LPDDR5X ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி உள்ளது.

    ஐகூ 11 அம்சங்கள்:

    6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜிபி, 16 ஜிபி LPDDR5X ரேம்

    256 ஜிபி UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    13MP 2x டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ 11 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ஆல்ஃபா மற்றும் கிளாஸ் பேக் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, சிலிகான் லெதர் பேக் மற்றும் பிஎம்டபிள்யூ டிசைன் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஐகூ 11 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் ஜனவரி 12 ஆம் தேதியே ஐகூ 11 ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும்.

    ×