என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  ஆண்டு விழா கொண்டாட்டம் - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி - ஐகூ அதிரடி!
  X

  ஆண்டு விழா கொண்டாட்டம் - ஸ்மார்ட்போனுக்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி - ஐகூ அதிரடி!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
  • ஐகூ பிராண்டின் ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

  விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது ஐகூ. 2020 வாக்கில் இந்தியாவில் கால்பதித்த ஐகூ பிராண்டு பல்வேறு ஸ்மமார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐகூ பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.

  ஐகூ இதுவரை அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பயனர் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஐகூ நிறுவனத்தின் சமீபத்திய ஐகூ 11 ஸ்மார்ட்போன் தலைசிறந்த அம்சங்களுடன் கிடைக்கிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிநவீன ரேம் மற்றும் மெமரி உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ. 59 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  எனினும், ஆண்டு விழா சிறப்பு விற்பனையை ஒட்டி ஐகூ 11 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐகூ 11 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதுதவிர ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கும் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  முன்னதாக ஐகூ 9 விலை ரூ. 42 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதனை ரூ. 30 ஆயிரத்து 990 விலையிலேயே வாங்கிட முடியும். இது ஐகூ 9 ஸ்மார்ட்போனின் பழைய விலையை விட ரூ. 12 ஆயிரம் வரை குறைவு ஆகும். ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை முன்னதாக ரூ. 64 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

  தற்போது ஐகூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ஐகூ நியோ 6 5ஜி ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஐகூ நியோ 6 5ஜி மாடல் விலை தற்போது ரூ. 24 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.

  ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஐகூ ஆண்டு விழா சிறப்பு விற்பனை ஐகூ மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

  Next Story
  ×