என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  விரைவில் இந்தியா வரும் ஐகூ Z7 - அசத்தல் டீசர் வெளியீடு!
  X

  விரைவில் இந்தியா வரும் ஐகூ Z7 - அசத்தல் டீசர் வெளியீடு!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் OIS வசதி கொண்ட பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது.

  புதிய ஐகூ Z சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அடங்கிய டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசரில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் பெயர் விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், படத்தில் உள்ள ஸ்மார்ட்போனின் பின்புறம் Z7 என எழுதப்பட்டு இருக்கிறது.

  அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் இது என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது நிபுன் மர்யா வெளியிட்டு இருக்கும் டீசர் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் டிசைன் தெரியவந்துள்ளது. இது தோற்றத்தில் கிட்டத்தட்ட விவோ T1x போன்றே காட்சியளிக்கிறது.

  இந்த ஸ்மார்ட்போனில் செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யுல், இரண்டு கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் OIS வசதி வழங்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. கேமரா சென்சாரை தொடர்ந்து எல்இடி ஃபிளாஷ் அருகில் "Photography High Definition" என எழுதப்பட்டு இருக்கிறது. பேக் பேனலின் கீழ்புறத்தில் ஐகூ பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது.

  மேலும் இந்த ஸ்மார்ட்போன் டியல் நிறம் கொண்டிருப்பது தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது. புதிய ஐகூ Z7 ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். முந்தைய ஐகூ Z சீரிஸ் மாடல்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐகூ Z7 சீரிசில் ஐகூ Z7 5ஜி மற்றும் Z7 ப்ரோ 5ஜி என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இவை I2207 மற்றும் I2213 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றிய தகவல்கள் மற்றும் இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்.

  Next Story
  ×