search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அடுத்த மாதம் இந்தியா வரும் ஐகூ நியோ 7 ப்ரோ
    X

    அடுத்த மாதம் இந்தியா வரும் ஐகூ நியோ 7 ப்ரோ

    • ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடல் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கலாம்.
    • ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம்.

    ஐகூ நிறுவனம் தனது புதிய ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முதல் டீசரில் போனின் பின்புறம் லெதர் போன்ற ஃபினிஷ் கொண்டிருக்கும் என்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆக இருக்கும் என்று கூறப்பட்டது. ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஐகூ நியோ 7 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும். ஐகூ நியோ 7 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. இது பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×