search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏபிடி டிவில்லியர்ஸ்"

    • டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
    • ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவடு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஜெஸ் ஜோனசனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் மகளிர் பிரீலிக் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களைச் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து ஆடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இந்நிலையில், இப்போட்டியின் போது ஆர்சிபி வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் சிக்சரை தடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டெல்லி வீராங்கனை ஷஃபாலி வர்மா சிக்சர் அடிக்கும் முயற்சியில் பந்தை விளாசினார். அப்பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜார்ஜியா வேர்ஹாம் லாவகமாக தாவி பந்தை பிடித்து தரையை தொடுவதற்கு முன் அதனை மைதானத்திற்குள்ளும் தள்ளிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

    முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கா விளையாடி வந்த ஏபிடி வில்லியர்ஸ் இதே போன்று ஒரு பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். அந்த காலத்தில் அவரை ஸ்பைடர் மேன் என நெட்டிசன்கள் புகழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் வேர்ஹாம் - டி வில்லியர்ஸ் இருவரும் ஒரே பாணியில் பந்தை தடுக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

    ×