search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏனாம் எம்எல்ஏ"

    • சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
    • கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.

    புதுச்சேரி:

    ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.

    அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

    • புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி. சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    இதுதொடர்பாக அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து, ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் அவரது மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளோம். சபாநாயகரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்படும்.

    கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் சட்டசபைக்கு வரும் போதும் நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.

    மேலும் அவருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கதிர், சங்கர், பொன்.சுகுமார், தேவா, மணிகண்டன், உறுவையாறு அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×