search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்சிஏ"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவகம் கட்டப்படும்.
    • 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.

    மும்பை:

    கடந்த 2011-ல் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.

    இறுதிப் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்திருந்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. சேவாக் மற்றும் சச்சினை இந்திய அணி விரைவாக இழந்தது. கோலி, 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டோனி முன்கூட்டியே பேட் செய்து போட்டியை மாற்றியமைத்தார்.

    குலசேகரா வீசிய 48.2 பந்தை டோனி சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வென்று கெத்து காட்டினார்கள். இதில் ஆட்டநாயகன் விருதை டோனி வென்றார்.

    இந்நிலையில் இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியினை கொண்டாடும் வகையில் வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு சிறிய நினைவு சின்னத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி டோனி அடித்த சிக்சர் இறங்கிய இடத்தில் இந்த நினைவு சின்னம் கட்டப்படும்.

    நினைவு சின்னம் திறப்பு விழாவிற்கு டோனியை அழைக்கவுள்ளதாக எம்சிஏ தலைவர் அமோல் காலே கூறியுள்ளார்.

    ×