search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி குழு"

    • மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசு உறுதி மொழிக் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், எம்.கே.மோகன், ராமலிங்கம் ஆகியோருடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்விற்குப் பின் அரசு உறுதிமொழிக் குழுத்தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்காடு அரசு மருத்துவ மனையில் இருந்த உடல் மறுகூராய்வு செய்கின்ற இடம் பழுதடைந்த நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பிரேதப் பரிசோதனை அறை கட்டித் தரரப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையில் உள்ளது.

    இந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது

    மாவட்ட கலெக்டர் மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முற்றிலும் நிறைவுபெற்று உள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இக்கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    இதனைத் தொடர்ந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிற்பகல் 3 மணிக்கு மேல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவானது அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு இணைச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வழங்கினார்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்ட மன்ற பேரவையின் உறுதி மொழி குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். இதில் ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் குழு தலைவர் வேல்முருகன் பேசியதா வது:-ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்படும் நிதி உரிய காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அந்த நிதியின் மூலம் பணிகளை முடித்து விடலாம். காலதாமதம் ஏற்பட்டால் பொருள்களின் விலை மாற்றம் ஏற்படும். அதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து அந்தப் பணியை முழுமையாக முடிப்பது என்பது கஷ்டமாகும். அதனால் கூடுதல் செலவினம் ஏற்படும். இது அரசுக்கு ஒருவகையில் இழப்பு ஏற்படும். இதை தவிர்த்து உரிய உறுதிமொழிகளை உரிய காலத்தில் செய்து அரசுக்கு எந்த வகையிலும் இழப்பீடு வராத வகையில் பார்த்து கொள்வதே இக்குழுவின் பணியாக உள்ளது.

    அரசின் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டப்படி உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 35 பயனாளிகளுக்கு ரூ.3.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

    ×