search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் நலம்"

    • உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை.
    • நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இம்முகாம் நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி வரவேற்றார்.குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுகந்தி தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை. அதை முறையாகப் பராமரித்து பாதுகாத்து நல்ல உடல் நலத்துடன் வாழ்வதும், அதை பாழ்படுத்தி வீணடிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இந்த பூமியில் நம் பிறப்பு மூலம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் உதவும் வகையில் நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.நம்மை நம்பியுள்ள நம் குடும்பத்தைக் காப்பாற்ற நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். எனவே அதை முறையாக நாம் பாதுகாத்து நலமுடன் இருக்க வேண்டும்.வேலைப் பளு காரணமாக மருத்துவ பரிசோதனைக்கும், உடல் நலம் காக்கவும் இயலாத நிலையில் உள்ளோருக்கு இது போன்ற மருத்துவ முகாம்கள் பயன்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.முகாமில், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதில் மகிளா கோர்ட்டு நீதிபதி நாகராஜன், மோட்டார் விபத்து வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நடுவர் புகழேந்தி, வக்கீல் சங்க நிர்வாகிகள், பழனிசாமி, சுப்ரமணியம், அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மலர்களை கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.
    • ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வியாதியை போக்கும் ஆற்றல் இருக்கிறது.

    மணம் வீசும் மலர்கள் மக்களை பலவிதங்களில் மகிழ்விக்கின்றன. பெண்களுக்கு அழகு சேர்க்கின்றன. கடவுளை பூஜிக்கவும், வழிபாட்டிற்கும் பயன் படுகின்றன. அவைகளில் இருந்து வாசனைத் திரவியங்களும் தயாராகின்றன. அதோடு மலர்கள் மருந்தாகவும் பயன்படுவது இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. "மலர்களை கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்" என்று பலரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புதுடெல்லியை சேர்ந்த மாலதி கேதன்.

    இவர், மலர்களை கொண்டு பல்வேறு வியாதிகளை குணப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார். மலர்கள் மருத்துவமாக கூறப்படும், 'பிளவர்ரெமிடி தெரபி' உண்மையிலேயே ஒரு அதிசயமான சிகிச்சை என்றும் கூறுகிறார்.

    "திருமணமான புதிதில் என் கணவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. அதனால் ரொம்ப அவதிப்பட்டார். சிகிச்சைக்காக பல்வேறு மருத்து வர்களிடம் அழைத்து சென்றேன். பணம் செலவழிந்தது தான் மிச்சம். ரத்த அழுத்தம் சீராகவில்லை.

    நான் மிகவும் பயந்துவிட்டேன். அப்போது ஒரு வெளிநாட்டு நண்பர் இந்த மலர் வைத்தியத்தை பற்றி சொன்னார். நானும் முதலில் நம்பிக்கை இல்லாமல் தான் சிகிச்சையை பெற்றேன். ஆனால் படிப்படியாக ரத்த அழுத்தம் குறைந்து என் கணவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார். அதிலிருந்து எனக்கு மலர் சிகிச்சை மீது நம்பிக்கை வந்து விட்டது. இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். சரியான சந்தர்ப்பம் அமையவில்லை.

    ஒருமுறை நான் விபத்தில் சிக்கினேன். கால் எலும்பு முறிந்து, 6 மாதம் படுக்கையில் கிடக்க வேண்டியதானது. அந்த நாட்களை வீணாக்காமல் உபயோகமாக எதையாவது செய்ய நினைத்தேன். அப்போது இந்த மலர் வைத்தியம் நினைவுக்கு வந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வரவழைத்து படித்தேன். படிக்க, படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. மலர்களுக்கு இத்தனை அற்புத குணங்களா என்று வியந்து போனேன். என் ஆர்வம் அதிகமானது. தொடர்ந்து படித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

    வெளிநாடுகளில் இதற்கென பல மருத்துவமனைகள் இயங்கி வருவதை தெரிந்து கொண்டேன். அதேபோல நானும் தொடங்க எண்ணம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இதற்கென தனி கல்லூரிகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் வாயிலாகவே கற்றேன். இதை பற்றி ஆராய்ந்து ஒரு முழுமையான ஆராய்ச்சி கட்டுரை தயாரித்தேன். அதை அடிப்படையாக வைத்து பி.எச்டி. ஆய்வு பட்டமும் பெற்றேன். பின்பு புதுடெல்லியில் இதற்கான மருத்துவமனை ஒன்றை தொடங்கினேன்.

    ஆங்கில சிகிச்சைகளில் ஊறிப்போன மக்களுக்கு இந்த மாற்று சிகிச்சையில் நம்பிக்கை வர கொஞ்சம் காலம் பிடித்தது. முதலில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளித்தேன். குணமடைந்த பின் திரும்ப, திரும்ப வர ஆரம்பித்தார்கள். இதை மக்களுக்கான சேவையாக மன நிறைவோடு செய்து வருகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், மாலதிகேதன்.

    "இந்தியாவில் ரிஷிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட சிகிச்சை இதுவாகும். இங்கே பிறந்த இந்த மருத்துவம் இப்போது உலகளாவிய நிலையில் புகழ்பெற்றிருக்கிறது. இந்த வைத்திய முறை மகாபாரத காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அரிய விஷயங்களை ரிஷிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். மனித சமுதாயத்திற்கு பலன் தரும் இந்த சிகிச்சை இன்றைய சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை.

    நம் நாட்டின் அரியவகை மூலிகைகளை கொண்டு சித்த வைத்தியம் செய்யப்படுகிறது. அதுபோல் இந்த மலர் வைத்தியமும் மலர்களுக்கு இருக்கும் சக்தியை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வியாதியை போக்கும் ஆற்றல் இருக்கிறது. ஒரு சில மலர்களை நுகர்வதால் பலன் கிடைக்கும். சில மலர்களை தூய நீரில் ஊறவைத்து குடிப்பதால் பலன் கிடைக்கும். ஒரு சில மலர்களை உலர வைத்து பயன் படுத்தி பலன் பெற முடியும்" என்கிறார், மாலதி கேதன்.

    மலர்களை இனம் கண்டு பறித்து, நோயின் தன்மைக்கு தக்கபடியான அளவில், வகைப்படுத்தி இதனை பயன்படுத்துகிறார்கள். இதற்கான படிப்பும் உள்ளது. ஒரு சில மலர்கள் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். ஒரே மாதிரி பல மலர்கள் இருக்கும். இதையெல்லாம் அனுபவ ரீதியாக உணர்ந்து அறியவேண்டும்.

    மூலிகைகளை விட மலர்களை இனம் காண்பது எளிது. மலர்கள் பல வண்ணங்களில் இருப்பதால் அவற்றை கண்டுபிடித்து விடலாம் என்றும் அவர் சொல்கிறார்.

    தூய்மையான கங்கை நீரை இந்த சிகிச்சைக்காக பயன்படுத்துகிறார் மாலதி. நீரில் மலரை ஊறவைத்து வெயிலில் வைத்து விடுகிறார். சூரிய வெப்பத்தின் காரணமாக அந்த மலரின் சக்தி அந்த நீருக்குள் இறங்கும். பிறகு அந்த நீரை கொண்டு சிகிச்சை அளிக்கிறார்.

    உலக அளவில் எத்தனையோ மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவிலான மக்கள் நம்புகிறார்கள். இந்த சிகிச்சையை நம்பும் மக்களும் இருக்கிறார்கள்.

    ×