search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடற்தகுதி தேர்வு"

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர்.

    காலை 6 மணியளவில் அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று உயரம், மர்பளவு, 1500 ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு நாளை கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    மேலும் வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    • பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வு நவம்பா் 7 -ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடற்தகுதி தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் அறிக்கையில் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வு நவம்பா் 7 -ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து இளைஞா்களும் உதவி ஆய்வாளா் பணிக்கான உடற்தகுதி தோ்வினை எதிா்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆகவே இந்த உடற்கல்வி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் இலவச பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். 

    • தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
    • ராணுவத்தில் எழுத்து தேர்வில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 726 பேர் பங்கேற்றனர். 2-வது நாளான நேற்று 890 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 785 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 1,600 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவைகளில் உடற்தகுதி தேர்வு நடந்தது. ஓட்டத்தில் 270 பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 5-ந்தேதியுடன் இந்த பணிகள் நிறைவடைகிறது.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்பகுதி தேர்வு நேற்று தொடங்கியது.

    நேற்று முதல் நாளில் உடற்பகுதி தேர்வில் கலந்து கொள்ள 400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. 359 பேர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். 41 பேர் கலந்து கொள்ளவில்லை. உடல் தகுதி தேர்வில் நேற்று ஒரே நாளில் 294 பேர் தேர்வு பெற்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2-வது நாளாக நடந்தது.

    இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், அசல் சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்டவை நடந்தது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் 120-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை 3-வது நாளாக உடல் தகுதி தேர்வில் 259 பேர் கலந்து கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 2-வது கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • 400 பேர் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் காவல் சரகத்திற்கு உட் பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2-ம் நிலை காவலர்க ளுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

    இவர்களுக்கான உடற்தகுதிதேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் முதற் கட்ட உடற்தகுதி தேர்வு இன்று தொடங்கி 8-ந்தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு 9-ந் தேதி முதல் 11 -ந் தேதி வரையும் நடக்கிறது. இன்று காலை அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற் கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு நடந்தது.

    இதற்காக வருபவர்கள் அழைப்புக்கடிதம், ஏதேனும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை கொண்டு வந்து இருந்தனர்.

    ஒரு நாளைக்கு 400 பேருக்கு உடற்தகுதி தேர் வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2-ம் நிலை காவலர் உடற்த குதி தேர்வுக்கான பணிகளில் டிஐஜி முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை யில் 120 போலீசார் ஈடுபட்டனர்.

    காவலர் தேர்வு முழுவதும் கேம ராவில் பதிவு செய்யப்பட்டது. இதையொட்டி நேதாஜி மைதானத்தில் பேரிகார்டுகள் அமைக் கப்பட்டு உடற்தகுதி தேர்வுக்கு வந்தவர்களை உயரம் அளவீடு செய்தல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண் டுதல் உள்ளிட்டவைகளில் பங்கேற்க செய்தனர்.

    உடல் தகுதி தேர்வில் பங்கேற்க நேற்று இரவு முதலே ஸ்டேடியத்திற்கு வெளியே வாலிபர்கள் காத்திருந்து உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    • நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது
    • டி- சர்ட் அணிந்து வர அனுமதி மறுப்பு

    வேலுார்:

    தமிழ்நாடு சீருடைப்ப ணியாளர் தேர்வாணையம் சார்பில், 2ம் நிலை போலீ சார், சிறை போலீசார் மற் றும் தீயணைப்பாளர் ஆகி யவற்றில் 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி எழுத்துத்தேர்வு நடந்தது.

    இதில், தமிழகம் முழு வதும் 2 லட்சத்து 99 ஆயி ரத்து 820 பேர் பங்கேற்ற னர். வேலுார்மா வட்டத்தில் 12 ஆயிரத்து 577 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, இந்த தேர்வின் முடிவுகள், கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி வெளியானது.

    இதை யடுத்து, எழுத் துத்தேர்வில் தகுதி பெற்ற வர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, நாளை முதல் வரும் 11ம் தேதி வரை நடக்கி றது. இதற்காக, ஒரு காலிப் பணியிடத்துக்கு 5 பேர் வீதம் என்ற அடிப்படை யில், தகுதி பெற்றவர்க ளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலுார் நேதாஜி மைதானத்தில் நடக்கும் உடற்தகுதித் தேர் வில், மொத்தம் ஆயிரத்து 300-க்கும் அதிகமான ஆண் கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிக்கு வரும்போது, அழைப்புக் கடிதம், ஏதே னும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட் டையையும் கொண்டு வர வேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப் பிட்டுள்ள அசல் சான்றி தழ்கள் மற்றும் அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுகளில் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கலந்துகொள்ள

    விரும்பினால் ஒரே வண் ணம் கொண்ட ஷார்ட்ஸ் மற்றும் எவ்வித எழுத்துக் களும் படங்களும் இல் லாத டி-சர்ட் அணிந்து வர வேண்டும். எவ்வித பயிற்சி மையத்தின் அடை யாளமோ அல்லது விண் ணப்பதாரர்கள் எவ்வித சின்னமோ கொண்ட டி- சர்ட் அணிந்து கொண்டு வரும் பட்சத்தில் உடற் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

    அனுமதி இந்த தேர்வுக்கு வரும் ஆண் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாமல் தங்களது தலைமுடியை சீராக திருத்தம் செய்து வர வேண்டும். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் மற்றும் ெகாரோனா விதி முறைகளை பின்பற்ற வேண்டும். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் மேற் கண்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்வு மையத் துக்கு வரும்படி தெரிவிக் கப்பட்டுள்ளது.

    • வனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.
    • 100, 400 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகின்ற 05.02.2023 அன்று முதல் 5 நாட்களுக்கு இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.

    இத்தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1138 ஆண் தேர்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 60 தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர் ஆகும்.

    நாளை முதல் 7-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட முதற்கட்ட தேர்வும், 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் 100, 400 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

    இத்தேர்வுக்கு வரும் நபர்கள் செல்பேசி, புளூடூத் இணைப்பு பொருத்தப்பட்ட கைகடிகாரம் மற்றும் இதர சாதனங்கள், அதி நவீன கருவிகள் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் எடுத்துவரும் உடைமைகளுக்கு அவரவரே பொருப்பேற்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் தேர்வர்கள் மீது தகுந்த விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், போட்டித் தேர்வுகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

    இரு சக்கர வாகனங்களில் வரும் தேர்வர்கள் கட்டாயம் மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டு, விதியில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து வாகனத்தில் தேர்வு மையம் வர வேண்டும்.

    தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பின்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் தகுந்த உத்தரவின்றி வெளியே செல்லவோ, உறவினர்களை சந்திக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் தினமும் ஒரு நாளைக்கு மொத்தம் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    தேர்வு மையம் உட்பட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    • இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
    • இதில் 41 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

    சேலம்:

    தமிழக காவல்துறையில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 23-ந்தேதி தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு உயரம் அளவீடு செய்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதன் முடிவில், முதல் நாளில் 284 பெண்கள் கலந்து கொண்டதில் 248 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து 2-ம் கட்ட தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு 171 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் 168 பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் 41 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 127 பேர் தேர்ச்சி பெறவில்லை. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று 127 பேர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்கள் தேர்வுக்கு முன்பு கடின பயற்சி செய்திருந்தால் அவர்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×