search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சப்-இன்ஸ்பெக்டர் உடற்தகுதி தேர்வில்  127 பெண்கள் தோல்வி ஏன்?-பரபரப்பு தகவல்
    X

    சப்-இன்ஸ்பெக்டர் உடற்தகுதி தேர்வில் 127 பெண்கள் தோல்வி ஏன்?-பரபரப்பு தகவல்

    • இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
    • இதில் 41 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

    சேலம்:

    தமிழக காவல்துறையில் புதிதாக 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 23-ந்தேதி தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு உயரம் அளவீடு செய்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதன் முடிவில், முதல் நாளில் 284 பெண்கள் கலந்து கொண்டதில் 248 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து 2-ம் கட்ட தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு 171 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் 168 பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் 41 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 127 பேர் தேர்ச்சி பெறவில்லை. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று 127 பேர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்கள் தேர்வுக்கு முன்பு கடின பயற்சி செய்திருந்தால் அவர்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×