search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனக்காவலவனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு
    X

    வனக்காவலவனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு

    • வனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.
    • 100, 400 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகின்ற 05.02.2023 அன்று முதல் 5 நாட்களுக்கு இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக்காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது.

    இத்தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1138 ஆண் தேர்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 60 தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர் ஆகும்.

    நாளை முதல் 7-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட முதற்கட்ட தேர்வும், 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் 100, 400 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

    இத்தேர்வுக்கு வரும் நபர்கள் செல்பேசி, புளூடூத் இணைப்பு பொருத்தப்பட்ட கைகடிகாரம் மற்றும் இதர சாதனங்கள், அதி நவீன கருவிகள் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் எடுத்துவரும் உடைமைகளுக்கு அவரவரே பொருப்பேற்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் தேர்வர்கள் மீது தகுந்த விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், போட்டித் தேர்வுகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

    இரு சக்கர வாகனங்களில் வரும் தேர்வர்கள் கட்டாயம் மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டு, விதியில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து வாகனத்தில் தேர்வு மையம் வர வேண்டும்.

    தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பின்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் தகுந்த உத்தரவின்றி வெளியே செல்லவோ, உறவினர்களை சந்திக்கவோ அனுமதிக்கப்படமாட்டாது. இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் தினமும் ஒரு நாளைக்கு மொத்தம் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    தேர்வு மையம் உட்பட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×