search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதிப்பட்டியல்"

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடந்த 26-ந்தேதி மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த கால அவகாசத்துக்குள் தமிழகம் முழுவதும் 1,587 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 518 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் பரிசீலனை 27-ந்தேதி நடைபெற்றது. அதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    அதை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெற 2 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெறுபவர்கள், 29-ந்தேதி (இன்று) மாலை 3 மணிக்குள் தங்கள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், களத்தில் நிற்கப்போகும், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

    எந்தெந்த தொகுதிகளில் யார்-யார்? களத்தில் நிற்கின்றனர்? எத்தனை பேர் களத்தில் இருப்பார்கள்? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை 3 மணிக்கு மேல் தெரியவரும். இந்த இறுதி வேட்பாளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் இன்று மாலை 3 மணிக்கு மேல் சுயேச்சை வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபடுவார்கள்.

    சுயேச்சை வேட்பாளர்கள் பலர் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால், அதை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, குறிப்பிட்ட வேட்பாளருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். தற்போது அ.ம.மு.க., வேட்பாளர்கள் அனைவருமே சுயேச்சை வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.



    அவர்கள் அனைவருக்கும், ஒரு பொதுவான சின்னத்தை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம், வழங்கும் அறிவுரையின் அடிப்படையில், அவர்களுக்கு சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    சின்னங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தேர்தல் களத்தில் பிரசாரம் இன்னும் சூடு பிடிக்கும்.  #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    ஐ.பி.எல். ஏலத்தில் 346 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. #IPL2019 #PlayerAuctionList
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஏலத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இதில் தங்களுக்கு தேவையான வீரர்கள் என்று அணி நிர்வாகங்கள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் பட்டியலை சமர்ப்பித்தன. இதன் அடிப்படையில் 346 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவற்றில் இருந்து 70 வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள். இதில் பிரன்டன் மெக்கல்லம், கோரி ஆண்டர்சன் (இருவரும் நியூசிலாந்து), கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன் (இங்கிலாந்து), மலிங்கா, மேத்யூஸ் (இலங்கை), ஷான் மார்ஷ், டார்சி ஷார்ட் (ஆஸ்திரேலியா), காலின் இங்ராம் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய 9 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதிக விலை பட்டியலில் எந்த இந்தியரும் இடம் பெறவில்லை.

    கடந்த ஏலத்தில் ரூ.11½ கோடிக்கு விலை போன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1½ கோடி ஆகும். தென்ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல், ஸ்டெயின், இங்கிலாந்தின் பேர்ஸ்டோ உள்ளிட்டோரை ரூ.1½ கோடியில் இருந்தும், இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, தென்ஆப்பிரிக்காவின் அம்லா, டுமினி, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் ஆகியோரை ரூ.1 கோடியில் இருந்தும் ஏலம் கேட்கலாம். இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் விலை ரூ.75 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும். வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் ஹெட்மயரின் தொடக்க விலை ரூ.50 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ×