search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு நேரங்களில்"

    • வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • தாளவாடி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலை யிலிருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    அதே போல் மாவட்ட முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மாலை 5 மணி பிறகு வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி யுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகரப் பகுதியில் சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் இரவு சாரல் மழை செய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    தாளவாடி பகுதியில் இரவில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்க லம், கோபி, பவானி, கவுந்த ப்பாடி, வரட்டுப்பள்ளம், கொடிவேரி, சென்னிமலை, நம்பியூர், பகுதிகளிலும் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    தாளவாடி - 33, கொடு முடி - 30.80, பெருந்துறை - 27, சத்தியமங்கலம்-27, கோபி - 25.20, பவானி - 21, பவானிசாகர் - 16, கவுந்தப்பாடி - 9.20, ஈரோடு- 9, வரட்டு பள்ளம்- 8.80, கொடிவேரி-6.20, சென்னிமலை - 5, நம்பியூர் - 3.

    ×