search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயர்போன்"

    • நத்திங் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது சாதனத்திற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
    • இந்த சாதனம் நத்திங் இயர் (ஸ்டிக்) எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் சில தினங்களுக்கு முன்பு தான் நத்திங் இயர் (ஸ்டிக்) மாடலை அறிமுகம் செய்து இருந்தது. கடந்த ஆண்டு நத்திங் இயர் (1) மாடல் அறிமுகமானதை அடுத்து நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகமானது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மிகவும் குறைந்த எடை, சவுகரியமான அனுபவத்தை வழங்கும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போன் மிகவும் வித்தியாசமான சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. இந்த இயர்போன் எளிதில் கொண்டு செல்லும் வகையிலான டிசைன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் கேஸ் தோற்றத்தில் நோக்கியா 705 ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும், இந்த இயர்போனின் மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரும் வாரங்களில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    • விங்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    • இந்த இயர்போன் அதிகபட்சமாக 40 மணி நேர பிளேபேக் வசதி கொண்டுள்ளது.

    விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பேண்டம் 210 பெயரில் புது நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன் டூயல் பேரிங், 50ms லேக்-ஃபிரீ ஆடியோ சின்க், 40 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. முன்னதாக விங்ஸ் நிறுவனம் விங்ஸ் 500 கேமிங் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய விங்ஸ் பேண்டம் 210 மாடல் எடை குறைந்த பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 கேசிங் கொண்டுள்ளது. மென்மையான சிலிகான் மற்றும் ABS பிளாஸ்டிக் மூலம் விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்-இன் இரு இயர்பட்களிலும் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. பேண்டம் இயர்போன் மற்றும் நெக்பேண்ட்களில் எல்இடி ஹைலைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.


    பேண்டம் 210 மாடலில் உள்ள ப்ளூடூத் 5.3 சிப்செட் அதிவேக டூயல் பேரிங் வசதியை வழங்குகிறது. மேலும் 15 மீட்டர்கள் வரை சீரான கனெக்டிவிட்டியை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. விங்ஸ் பேண்டம் 210 மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் கேமிங் இயர்பட்ஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விங்ஸ் பேண்டம் 210 மாடல் பிளாக் மற்றும் புளூ - கிரே நிறங்களில் கிடைக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் மற்றும் ஐபோன் மாடல்களுடன் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ ஏராளமான அப்டேட்களை பெற்று இருக்கிறது.

    ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புது இயர்பட்ஸ் தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ள H2 பிராசஸர் இருமடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதிகளை வழங்குகிறது. இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யும் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். புது இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சிறிய ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.


    ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ அம்சங்கள்:

    ஹை டைனமிக் ரேன்ஜ் ஆப்ளிபையர் கொண்ட ஆப்பிள் டிரைவர்

    ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

    ப்ளூடூத் 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி

    தனித்துவம் மிக்க ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங்

    இன் கேஸ் ஸ்பீக்கர், கான்வெர்சேஷன் பூஸ்ட், பிரெசிஷன் ஃபைண்டிங்

    அடாப்டிவ் டிரான்ஸ்பேரன்சி, அடாப்டிவ் இகியூ

    ஆப்பிள் H2 பிராசஸர்

    சார்ஜிங் கேசில் ஆப்பிள் U1 சிப்

    அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம்

    மேக்சேப் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கான பிளேடைம்

    ஐந்து நிமிட சார்ஜில் ஒரு மணி நேரம் பயன்படுத்தும் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 26 ஆயிரத்து 900 ஆகும்.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது.

    நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ப்ளூடூத் மூலம் இயங்கும் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் ஆகும். நாய்ஸ்பிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    புதிய நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்கள் ரியல்மி, ஒன்பிளஸ், போட் மற்றும் இதர பிராண்டு இயர்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஏதுவாக காந்தம் வழங்கப்பட்டு உள்ளது.


    இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் சமீபத்தில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்துடன் தானாக கனெக்ட் ஆகும் வசதி கொண்டது, நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்களில் 10 மில்லிமீட்டர் டிரைவர் உள்ளது. இவை என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. அழைப்புகளின் போது ஏற்படும் வெளிப்புற சத்தத்தை இந்த அம்சம் பெருமளவு குறைத்து விடும்.

    முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் 100+ அதிக மணி நேர பிளேபேக் வழங்கும். இந்த இயர்போன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன் தண்டர் பிளாக், பிலேசிங் பர்பில் மற்றும் ரேஜிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.

    ×