search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்சூரன்ஸ் பணம்"

    • பாட்டியாலா சாலையில் உள்ள கால்வாய் அருகே சுக்ஜீத்தின் உடல், மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு கண்டெடுக்கப்பட்டது.
    • தொழிலில் நஷ்டம் அடைந்ததால் இன்சூரன்ஸ் பணம் ரூ.4 கோடியை பெறுவதற்காக குர்ப்ரீத் சிங் தான் இறந்ததாக சுக்ஜீத்தை கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் ராம்தாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங். இவரது மனைவி குஷ்தீப் கவுர்.

    குர்ப்ரீத் சிங் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். அவரது தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தனது இன்சூரன்ஸ் பணம் ரூ.4 கோடியை பெற திட்டமிட்டார். இதற்காக தனது போலி மரணத்தை ஏற்படுத்த திட்டமிட்டார்.

    சைன்பூர் பகுதியை சேர்ந்த சுக்ஜீத் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு நண்பர் போல் அவருடன் நெருக்கமாக பழகினார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி முதல் சுக்ஜீத்தை திடீரென காணவில்லை. அவரை அவரது மனைவி ஜீவன்தீப் கவுர் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுக்ஜீத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாட்டியாலா சாலையில் உள்ள கால்வாய் அருகே சுக்ஜீத்தின் உடல், மோட்டார் சைக்கிள் மற்றும் செருப்பு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது குர்ப்ரீத் சிங், தனது கணவருக்கு தொடர்ந்து மது வாங்கி கொடுத்ததாக சுக்ஜீத்தின் மனைவி போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் குர்ப்ரீத் சிங்கை பிடித்து விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் குர்ப்ரீத் சிங் சாலை விபத்தில் இறந்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்களுடைய பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தொழிலில் நஷ்டம் அடைந்ததால் இன்சூரன்ஸ் பணம் ரூ.4 கோடியை பெறுவதற்காக குர்ப்ரீத் சிங் தான் இறந்ததாக சுக்ஜீத்தை கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

    இதற்கு உடந்தையாக குர்ப்ரீத் சிங்கின் மனைவி குஷ்தீப் கவுர் மற்றும் சுக்விந்தர் சிங் சங்கா, ஜஸ்பால்சிங், தினேஷ்குமார் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து குர்ப்ரீத் சிங் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×