search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதல்"

    • கிடைத்த வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
    • கேட்சுகளை தவற விட்டதற்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்தியாவை தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தோல்வி குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளதாவது:

    ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம். அதனால் தான் 134 என்ற எளிதான இலக்கை கூட எட்ட தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர்.  


    நாங்கள் ஃபீல்டிங்கில் கடுமையாக சொதப்பினோம். கடும் குளிரால்தான் கேட்ச்களை நழுவ விட்டோம் என்று காரணம் சொல்ல நான் விரும்பவில்லை. இதற்கு முன் இது போன்ற சூழலில் விளையாடி இருக்கிறோம்.

    எனினும் நேற்றைய போட்டியில் எங்களது ஃபீல்டிங் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்தோம். ஆனால் நேற்று நிறைய வாய்ப்புகளை எங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 


    எங்களால் சில ரன் அவுட்டுகளை செய்ய முடியவில்லை. நானும் ரன் அவுட்டை மிஸ் செய்தேன் இந்த தோல்வியால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்றைய போட்டியிலும் கோலி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்ப்பு
    • கோலியை எதிர்கொள்ள காத்திருக்கும் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.  தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. உலகின் அதிவேக வேகப்பந்து வீச்சிற்கான ஆடுகளம் என்று இந்த மைதானம் அழைக்கப்படுகிறது.

    இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த விராட் கோலி இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நிலையில் கோலியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடாவும், அன்ட்ரிச் நார்ஜே, எய்டன் மார்க்ரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×