search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தொழிலாளர்கள்"

    • ஹமாஸ் அமைப்புடனான போரால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    • இதனால் 6 ஆயிரம் இந்தியர்கள் அடுத்த மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளது. போரினால் காசா பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

    ஹமாஸ் அமைப்புடனான மோதலால் இஸ்ரேலின் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. இத்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. போர் தொடங்கிய பின் அங்கு பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. சமீபத்திய மோதலால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர்

    கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதல்கட்டமாக 64 இந்திய தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மாத இறுதிக்குள் 1,500 தொழிலாளர்களை வரவழைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு சுமார் 6 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் வரவழைக்கப்பட உள்ளனர். சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என இஸ்ரேல் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ×