search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி பூரம்"

    • பாரதிய ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார்
    • செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    தர்மபுரம் ஊராட்சிக்கு ட்பட்ட இலந்தையடித்தட்டு மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடி பூர விழாவினை முன்னிட்டு கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது.பா.ஜ.க. முன்னாள் குமரி மாவட்ட தலைவரும், முன்னாள் கோட்ட இணை பொறுப்பாளரும், முன்னாள் தர்மபுரம் ஊராட்சியின் தலைவரும், பிள்ளையார்புரம் தென்குமரி கல்வி கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினருமான டாக்டர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராஜாக்கம ங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், தர்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி கணேசன், பாரதிய ஜனதா முன்னாள் கோட்ட இணை பொறுப்பாளர் வேல்பாண்டியன், தர்மபுரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் செல்லப்பெருமாள், சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் விநாய கராம், முருகேசன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி துணை தலைவர் கனகராஜன், பாரதிய ஜனதா கிளை தலைவர் இலந்தை ஸ்ரீஅய்யப்பன், மற்றும் செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • மாசிமக பெருவிழாவும், ஆடிப்பூர திருக்கல்யாணமும் மிக சிறப்பு
    • முருகர் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூஜித்த தலம்.

    `திருமுதுகுன்றம்' என அழைக்கப்படும், விருத்தாசலம் `பழமலை நாதர் திருக்கோவிலில்' உள்ளது `மணிமுத்தாறு தீர்த்தம்'.

    இத்தலத்து இறைவன் பெயர் `விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்' என்பதாகும். அம்பாள் பெயர், `விருத்தாம்பிகை, பெரிய நாயகி பாலாம்பிகை' என்பதாகும்.

    இத்தலத்து மரம், `வன்னி' ஆகும். இத்தலத்து விநாயகர் `ஆழத்துப்பிள்ளையார்' என அழைக்கப்படுகிறார். இது ஒரு தேவார தித்தலம். இத்தலத்தை, அருணகிரி நாதர், குரு நமசிவாயர் சிவப்பிரகாசர், வள்ளலார் முதலிய மகான்கள் புகழ்ந்து பாடியுள்ளார்.

    இத்தலத்தில் மாசிமக பெருவிழாவும், ஆடிப்பூர திருக்கல்யாணமும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட திருத்தலம் இது. முருகர் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூசித்த தலம் இது. சுந்தரர் இத்தலத்து இறைவனை வேண்டி பொன்னை பெற்று, இங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார்.

    இத்தலத்திற்கு `விருத்தகாசி' என்ற பெயரும் உண்டு. இத்தலம் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் இறப்பவர்களின் உயிரை இறைவன் தன் தொடை மீது கிடத்தி மந்திர உபதேசம் செய்வார். அப்போது அம்மாள் தனது முந்தானையால் விசிறி இளைப்பாற்றுவார்.

    அத்தகைய சிறப்புடைய இத்திருத்தலத்தின் தீர்த்தமாகிய மணிமுத்தாற்றில், இந்த ஆலயத்தின் வடக்குக் கோபுரவாயிலுக்கு நேரே உள்ள `வடபால் மணிமுத்தாற்றில்' நீராட வேண்டும். இவ்விடமே `புண்ணிய மடு' என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நீராடி, பிள்ளையார், இறைவன், அம்பாளை வழிபட முக்தி நிலை கிட்ட சிறந்தொரு பரிகாரமாகும்.

    திருப்பூவனம் வைகை தீர்த்தம்

    வைகைக் கரையில் அமைந்துள்ள இத்திருகோவிலுக்கு, வைகை ஆறே தீர்த்தமாக உள்ளது. இத்தலத்து இறைவன் பெயர், `புஷ்பவனேஸ்வரர், பூவன நாதர்' என்பனவாகும். அம்பாள் பயர், `சௌந்தர நாயகி, மின்னனையாள்' என்பதாகும்.

    தல மரம், பாலமரம் ஆகும். தேவார பாடல் பெற்ற திருத்தலம், இது. இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    இங்கு பங்குனியில் பெரும் விழா நடைபெறுகிறது. காசிக்குச் சமமான தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்குள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தம், நிறைவான தரிசனம் இது.

    பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து, இரசவாதம் செய்து, அவளுக்கு பொன்னைக் கொடுக்க, அதனை வைத்து அவள் இங்கு சிவலிங்கம் அமைத்து, வழிபட அதுவும் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு ஆசையுடன் அந்த சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம். இவ்வாறு அவள் கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.

    இக்கோவிலில் `பொன்னனையாள்', `சித்தர்கள்' ஆகியோர் உருவங்கள் உள்ளன. திருவாசகத்திலும், கருவூர்த் தேவரின் திவிசைப்பாவிலும் இத்தலம் போற்றப்படுகிறது.

    பிரம்மன் வழிபட்ட தலம், இது. இத்தலத்தில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருக்கும் வைகை மணல், சிவலிங்கமாக தோன்றியதால், மூவரும் மறுகரையில் இருந்தே இக்கரையை மிதிக்க அஞ்சி வணங்க, அதற்கு இறைவன் அவர்கள் நேநேர கண்டு வணங்குவதற்கு ஏதுவாக, நந்தியை விலகச் செய்தருளினார். அதனால் இத்தலத்தில் இன்றும் இந்த நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.

    வைகையின் மறுகரையில் இருந்து அவர்கள் தொழுத இடம், `மூவர் மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம்' என அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து தீர்த்தமான வைகை ஆறு வடக்கு நோக்கி, `உத்தரவாகினி'யாக இங்கு ஓடுகிறது. எனவே, இந்த தீர்த்தம் விசேஷமாகக் கூறப்படுகிறது.

    இறந்தோரின் எலும்புகளை இந்த இடத்தில் புதைப்பதால், அவர்கள் நற்கதியை அடைவார்கள். அத்தகைய சிறப்புமிக்கது இந்த வைகை தீர்த்தம்.

    • ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார்.
    • வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சக்தி தலங்களில் முதன்மையான தலங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் அம்பிகை பட்டத்தரசியாக மூடி சூட்டிக் கொண்டு ஆட்சி செய்வதாக ஐதீகம்.

    ஆடியில் மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாக முளைக்கொட்டுத் திருவிழா நடக்கும். இந்த விழா பத்து நாட்கள் நடக்கும். கோவிலுக்குள் இருக்கும் ஆடி வீதியில் மீனாட்சியம்மன் தினமும் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம்.

    விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கு சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆடி பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவார்கள்.

    வெற்றிலை அலங்காரம்

    ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் சிறப்பான ஒரு தினமாகும். வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர்.

    சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பார்கள்.

    பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று சென்னை அருகே அனுமந்தபுரத்தில் உள்ள வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.

    ×