இலந்தையடித்தட்டில் ஆடி பூர கஞ்சி கலச ஊர்வலம்

பாரதிய ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார்செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இலந்தையடித்தட்டில் ஆடி பூர கஞ்சி கலச ஊர்வலம்
Published on

கன்னியாகுமரி :

தர்மபுரம் ஊராட்சிக்கு ட்பட்ட இலந்தையடித்தட்டு மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடி பூர விழாவினை முன்னிட்டு கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது.பா.ஜ.க. முன்னாள் குமரி மாவட்ட தலைவரும், முன்னாள் கோட்ட இணை பொறுப்பாளரும், முன்னாள் தர்மபுரம் ஊராட்சியின் தலைவரும், பிள்ளையார்புரம் தென்குமரி கல்வி கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினருமான டாக்டர் கணேசன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜாக்கம ங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன், தர்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி கணேசன், பாரதிய ஜனதா முன்னாள் கோட்ட இணை பொறுப்பாளர் வேல்பாண்டியன், தர்மபுரம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் செல்லப்பெருமாள், சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் விநாய கராம், முருகேசன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி துணை தலைவர் கனகராஜன், பாரதிய ஜனதா கிளை தலைவர் இலந்தை ஸ்ரீஅய்யப்பன், மற்றும் செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com